அரை டிராயரில் ஜிம்மில் வெறித்தனமான வொர்க் அவுட் – ராஜா ராணி 2 வேலைக்கார மயிலா இது ?

0
891
mayil
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியலில் வரும் மயிலா இது ! என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகிறார்கள். ரசிகர்கள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் மக்களின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக திகழ்வது தான் ராஜா ராணி 2 சீரியல். இந்த தொடரின் முதல் பாகம் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த தொடரில் சரவணனாக சித்துவும், சந்தியாவாக ஆலியா நடித்து வருகிறார்கள். தற்போது இந்த சீரியல் பல விறுவிறுப்புடனும், திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-
raja-rani-2-mayilu

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் வரும் நடிகை மயிலுவின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர். இவர் என்ஜினியரிங் படிக்கும் பொழுதே மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். பின் இவர் ராம்ப் வாக், டிவி ஷோ போன்று பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். பின் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு நவ்யா சென்னைக்கு வேலை தேடி வந்தார். அப்போது இவருக்கு தமிழ் படம் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தது.

- Advertisement -

மேலும், தமிழ் படம் 2 படத்தில் இவர் இறுதிச்சுற்றில் வரும் ரித்திகா சிங் போல் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களிலும் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் மிஸ் ஏபி 2015 போட்டியில் இறுதிச் சுற்றுவரை சென்றிருந்தார். பின் இவர் வெங்கட்பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் வேலைக்கார பெண் மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நவ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்றே சொல்லலாம். மேலும், இந்த தொடரில் நவ்யா பாவாடை தாவணியில் குடும்பப் பெண்ணாகவே நடித்திருப்பார்.

சீரியலில் இவருடைய பேச்சும், எதார்த்தமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் கவர வைத்தது. சீரியலில் பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக இருக்கும் நவ்யா நிஜ வாழ்க்கையில் அப்படியே செம்ம மாடர்ன் என்று சொல்லலாம். மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் நவ்யா தான் எடுக்கும் விதவிதமான போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். அதோடு நவ்யா கவர்ச்சியான உடைகளில் கூட போட்டோ ஷூட் எடுத்து பதிவிடுவார். இந்த நிலையில் நவ்யா தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதை பார்த்த பலரும் ‘ஜிம் வொர்க் அவுட் செய்யும் மயிலு’ என்றும், ராஜா ராணி 2 மயிலா? இது என்றும், இத்தொடரில் வரும் ஆலியாவை மிஞ்சும் அளவிற்கு ஜிம் வொர்க் அவுட் செய்கிறாரே என்றும் பதிவிட்டு வருகிறார்கள். அதோடு இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. மேலும், நவ்யா மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போது நவ்யா சீரியல், திரைப்படம், விளம்பரம் என பிஸியாக ஒரு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertisement