‘தற்காலிகமா, நிரந்தரமா’ – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புதிய சந்தியா, அப்போ ஆல்யா சொன்னது ?

0
1116
rajarani
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க போகும் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சீரியலில் ஆல்யா விலக காரணம்:

இதனிடையே இவர்கள் இருவருமே எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். அடிக்கடி தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்கள். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை சோசியல் மீடியாவில் சஞ்சீவ் தெரிவித்திருந்தார். இப்படி இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் தற்போதும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார் ஆல்யா.

நிரந்திர சந்தியா என்று கூறிய ஆல்யா :

அதே போல ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகப்போபவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் வந்து கொண்டு இருந்தது.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஆல்யா மானஸா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, ராஜா ராணி 2வில் இருந்து விலக எந்த ஒரு எண்ணமும் இல்லை. ஒரே ஒரு சந்தியா தான். அது இந்த ஆல்யா மட்டும் தான் என்று பதில் அளித்துள்ளர். இதன் மூலம் ராஜா ராணி 2 வில் இருந்து ஆல்யா எப்போதும் விலக மாட்டார் என்பது உறுதியாகியது

-விளம்பரம்-

சந்தியாவாக ரியா :

ஆனால், ஆல்யா மானஸா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடிக்க வந்திருக்கிறார். ஆல்யா மானஸா முதல் குழந்தை பிறந்த சில மாதத்தில் மீண்டும் சீரியலில் நடிக்க வந்தார். அதனால் இரண்டாம் குழந்தை பிறந்த பின்பும் மீண்டும் அவர் சீரியலில் நடிக்க வந்துவிடுவார். அதனால் ரியா தற்போது தற்காலிக சந்தியா தான் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இனி நிரந்தர சந்தியா இவங்க தானா :

அதே போல ஆல்யா மானஸா மீண்டும் பிரசவத்திற்கு பின் நடிப்பார் என தகவல் கூறப்பட்டு வந்தது. அதனால் ஆல்யா ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் தற்போது அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் புதிய சந்தியாவாக வந்துள்ள ரியா போட்டிருக்கும் ஒரு கமெண்ட் அமைந்திருக்கிறது. சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் ‘தயவு செஞ்சி temporaryனு சொல்லிருங்க, ஆல்யா தான் சரியா இருப்பாங்க’ என்று கமன்ட் செய்து இருந்தததற்கு தான் permanent ஆக சந்தியா ரோலில் நடிக்கப்போவதாக கூறி இருக்கிறார் ரியா.

Advertisement