பற்கள் சீரமைப்பு சிகிச்சை செய்துகொண்டுள்ள ராஜா ராணி 2 அர்ச்சனா – அதுக்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
1277
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஸா நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த தொடரின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. இதில் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ்விற்கு பதிலாக திருமணம் சீரியல் புகழ் சித்து நடித்து வருகிறார். முதல் பாகத்தை போல இந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் Vj அர்ச்சனா நடித்து வருகிறார்.

- Advertisement -

இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. சிறு வயது முதலே ஆங்கராக வேண்டும் என்று கனவுடன் இருந்த இவர் , ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் Vjவாக அறிமுகமானர். அதன் பின்பு இன்ஸ்டா மூலம் விஜய் டிவி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா ஷோவிலும் பங்கேற்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா கலந்து கொண்டு இருக்கிறார்.

அதன் பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். ராஜா ராணி 2 தொடரில் நடிப்பதற்கு முன்பாக அர்ச்சனாவின் பற்கள் சீராக இல்லாமல் தான் இருந்துள்ளது. அதன் பின்னரே அவர் பற்கள் சீரமைப்பு சிகிச்சை செய்துகொண்டு இருக்கிறார். அந்த சிகிச்சைக்கு முன்னர் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க.

-விளம்பரம்-
Advertisement