ராஜா ராணி சீரியல் நடிகை சங்கீதாவிற்கு கோலாகலமாக இன்று திருமணம் முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான். இந்த சீரியல் ஏற்கனவே முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று இருந்ததால் தான் டிஆர்பியிலும் முன்னிலை வகித்து இருந்தது.

மேலும், ராஜா ராணி 2 சிரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் பெண் ஒருவர் இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவி ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசையை கதாநாயகன் தெரிந்து கொள்கிறார். ஆனால், இந்த ஆசைக்கு எதிராக கதாநாயகனின் தாய் இருக்கிறார். இதை எல்லாம் மீறி தன்னுடைய மனைவியின் கனவை கதாநாயகன் நிறைவேற்றுவது தான் சீரியல் கதைக்கு.
ராஜா ராணி 2 சீரியலில் சங்கீதா:
மேலும், இந்த சீரியலில் சரவணனின் கடைசி தம்பி ஆதியின் மனைவியாக ஜெசி என்ற கதாபாத்திரத்தில் சங்கீதா நடித்திருந்தார். முதலில் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் மீடியாவுக்குள் அறிமுகமானார். அதன் பின் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் விடியோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் இவர் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு தான் சங்கீதாவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.
View this post on Instagram
சங்கீதா காதல் சர்ச்சை:
இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இந்த சீரியலின் மூலம் சங்கீதா அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தான் சங்கீதாவிற்கும் டிடிஎஃப் வாசனுக்கும் திருமணம் நடைபெற இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. சமூக வலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் வேகமாக ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு தொடர்பாக உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
சங்கீதா விளக்கம்:
இவரை தான் சங்கீதா திருமண செய்ய போவதாக பத்திரிகை எல்லாம் வெளியாகி இருந்தது. பின் இதற்கு விளக்கம் கொடுத்து சங்கீதா வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், இதுதான் எங்களுடைய திருமண பத்திரிக்கை. எனக்கு திருமணம் நடைபெறுவது உண்மைதான். டிடிஎஃப் வாசன் எனக்கு தம்பி போன்றவர். தேவையில்லாமல் வதந்தியை பரப்பாதீர்கள். உங்களுடைய அன்புக்கு நன்றி என்று கூறியிருந்தார்.
View this post on Instagram
நடிகை சங்கீதா திருமணம் வீடியோ:
இந்நிலையில் சத்தம் இல்லாமல் இன்று நடிகை சங்கீதாவிற்கு திருமணம் நடைபெற்றுகிறது. இவருடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தார்கள். தற்போது சங்கீதாவின் திருமண புகைப்படம், வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சங்கீதாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், சங்கீதா கணவர் குறித்த விவரம் தான் தெரியவில்லை.






