பணத்தை வாங்கி ஏமாற்றினாரா ஆல்யா மானஸா – ப்ரோமோஷன் சர்ச்சையில் விஜய் டிவி பிரபலங்கள். திருப்பி கிடைத்த பல லட்ச பணங்கள்.

0
4431
alya
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் செய்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஒரு சிலர் தர்ஷா குப்தாவை திட்டி தீர்த்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தர்ஷா குப்தா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சினிமா நடிகைகளை விட சின்னத் திரை நடிகைகள் தான் ப்ரோமோஷன் என்ற பெயரில் சில பொருட்களை விளம்பரம் செய்து அதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணத்தை சம்பாதிக்கின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-42.jpg

ஒரு போஸ்டுக்கு இவ்வளவு ஒரு ஸ்டோரி இவ்வளவு இன்ஸ்டாவில் அந்த பொருட்கள் குறித்து வீடியோ போட இவ்வளவு என்று கணக்கிட்டு சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை பெறுகின்றனர். எந்த அளவிற்கும் போலோவர்ஸ் வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்த ப்ரோமோஷனுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.இப்படி ஒரு நிலையில் தர்ஷா குத்பா உட்பட விஜய் டிவி சீரியல் நடிகைகளான பவித்ரா, காவ்யா, சான்ட்ரா, ஆல்யா மானஸா என்று பல பிரபலமான நடிகைகள் சிறு தொழில் முனைவோரிடம் பொருட்களை விளம்பரம் செய்து தருவதாக பணத்தை பெற்றுவிட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த பொருட்கள் குறித்து ப்ரொமோஷன் செய்யாமல் இருந்துள்ளனர் என்று சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இவரின் இந்த பதிவை தொடர்ந்து பல பிரபலங்களும் ப்ரோமோஷன் செய்வதர்க்காக பல மாதங்களுக்கு முன் வாங்கிய பணங்களை திருப்பி கொடுத்துள்ளனர். இதுவரை பிராண்டுகளுக்கு 4,50,000 ரூபாய் அப்படித் திருப்பித் தரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வாங்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதே போல ஆல்யா மானசா எல்லாம், பணம் இருந்தா பேசுங்க இல்லன்னா ப்ரோமோஷன் பத்தியெல்லாம் பேசாதீங்க என்று திமிராக பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து ஆல்யா மானஸா கமன்ட் ஒன்றை போட்டிருந்தார். அதில், நீங்கள் எடுத்திருப்பது ஒரு நல்ல முயற்சி உங்களால் தான் நான் எந்த அந்த நபருக்கு எல்லாம் பதிலளிக்காமல் இருந்திருக்கிறேன் என்பது தெரியவந்தது உங்களுடைய வார்த்தைகள் மிகவும் கடுமையாக இது என்னுடைய வாழ்க்கையில் நான் யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டது கிடையாது, தவறாக பேசியது கிடையாது. என்னுடன் ப்ரோமோஷன் செய்தவர்கள் அனைவரிடமும் என்னுடைய தொடர்பு எண்ணை கொடுத்து இருக்கிறேன் நான் ஒரு பிரச்சனை கூட விட்டது கிடையாது நான் தினமும் சிறுதொழில் செய்பவர்களுக்காக பல உதவிகளை செய்து இருக்கிறேன் என் மீதான உங்கள் வார்த்தை என்னை மிகவும் பாதித்து இருக்கிறது என்னைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி பேசி இருக்க மாடீர்கள்.

-விளம்பரம்-
Advertisement