கர்ப்பமாக இருக்கும் வேலையில் என்ன ஒரு ஆட்டம் - தன் ரீல் மச்சினனுடனே ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானஸா

By Ajju · 18/11/2021

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

https://twitter.com/chettyrajubhai/status/1461295128165773316

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள். ஆனால், இவர்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது. அதற்கு காரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : ஆந்திரா கம்பெனியை நம்பியதால் கோவிந்தா, கோவிந்தா - பணத்தை ஏமாந்ததாக சினேகா, போலீசில் புகார்.

இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆய்லா என்ற மகளும் பிறந்தார். ஆல்யா மான்ஸா, ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர்களது மகள் 'அய்லா 'வின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். இப்படி ஒரு நிலையில் ல் யா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் வெளியிட்டு இருந்தார்.

ஆல்யா மானஸா, முதன் முறையாக கர்ப்பமாக இருந்த போதே பல விதமான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கும் ஆல்யா, தற்போதும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா ராணி தொடரில் இவரின் மச்சினனாக நடித்து வரும் நடிகருடன் ட்ரெண்டிங் ரீலிஸ்ஸுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full