ஆந்திரா கம்பெனியை நம்பியதால் கோவிந்தா, கோவிந்தா – பணத்தை ஏமாந்ததாக சினேகா, போலீசில் புகார்.

0
916
sneha
- Advertisement -

ஆந்திர சிமென்ட் கம்பெனியில் 25 லட்சம் முதலீடு செய்ததாகவும், அந்த கம்பெனி தங்களை ஏமாற்றி இருப்பதாகவும் காவல் நிலையத்தில் நடிகை சினேகா புகார் அளித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்கள் ஆகவும், ஜோடிகள் ஆகவும் திகழ்ந்து வருபவர் சினேகா- பிரசன்னா. இவர்கள் குடும்பத்துடன் சென்னை கானத்தூர் அருகே பனையூர் பகுதியில் உள்ள 5-வது அவென்யூவில் வசித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னாவின் நண்பர் தான் பிரசாந்த்.

-விளம்பரம்-

பிரசாந்த் ஆந்திராவில் உள்ள பிரபல சிமென்ட் கம்பெனியில் முதலீடு செய்வது குறித்தும், அதன் மூலம் மாதந்தோறும் 1.80 லட்சம் தொகை வருமானம் கிடைப்பதாகவும் பிரசன்னாவிற்கு கூறியிருந்தார். பின் இதையடுத்து பிரசாந்த் அந்த சிமென்ட் கம்பெனியில் முதலீடு செய்யுமாறு பிரசன்னா– சினேகாவிடம் கட்டாயப்படுத்தி இருக்கிறார். அதனால் நடிகை சினேகா அவர்கள் ஆந்திர சிமெண்ட் கம்பெனியில் மே மாதம் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.

இதையும் பாருங்க : ‘என்ன நீங்க பாத்துக்கோங்க’ – மாநாடு படத்தின் பிரெஸ் மீட்டில் அழுத சிம்பு. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

ஆனால், ஒப்பந்தப்படி சினேகாவுக்கு சம்பந்தப்பட்ட கம்பெனி எந்த ஒரு பணத்தையும் கொடுக்கவில்லை. இந்நிலையில் இதனையடுத்து நடிகை சினேகா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் சிமெண்ட் நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை விசாரணைக்கு வரும்படி போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் சினேகா போலீசில் அளித்த புகாரில் கூறியது, நாங்கள் ஆந்திர கம்பெனியில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். ஆனால், அந்த கம்பெனி எங்களை ஏமாற்றி விட்டது என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், அதன் பேரில் தான் முதற்கட்ட விசாரணை போலீசார் நடத்தி வருகிறார்கள். ஆனால் ,இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு போலீசாரின் விசாரணைக்கு பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நடிகை சினேகாவின் சிமெண்ட் நிறுவனம் மீது கொடுத்த மோசடிப் புகார் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement