ஜான்சி ராணி முதல் வேலு நாச்சியார் வரை – பெண் கெட்டப்பில் அசத்தியுள்ள விஜய், ஆர்யா பட காமெடி நடிகர்.

0
11293
karthi
- Advertisement -

சினிமாவைப்பொறுத்தவரை எத்தனையோ நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள் எம்ஜிஆர், சிவாஜி முதல் ரஜினி, கமல், விஜய், அஜித் வரை பல்வேறு நடிகர்களும் பெண் வேடம் போட்டு நடித்திருக்கிறார்கள். அதேபோல பல்வேறு காமெடி நடிகர்கள் கூட பெண் வேடம் போட்டு நடித்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழில் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் கார்த்தி வரலாற்றில் இடம்பிடித்த வீர மங்கைகளின் பெருமையை எடுத்துக் காட்டும் வகையில் பெண் வேடமிட்டு போட்டோ ஷூட் நடத்தி இருப்பது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

கார்த்தி யார் தெரியவில்லையா தமிழில் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் தான். அட, அதாங்க இன்று நேற்று நாளை படத்தில் சைன்டிஸ்ட்டா வருவாரே அவரே தான். நடிகர் கார்த்தி பல வருடங்களாக சினிமா துறையில் இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவரும் வெளியேற போகிறாரா ? வைரலாகும் இன்ஸ்டா பதிவு.

- Advertisement -

இவர் பிரபல நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் குழுவை சேர்ந்தவர் தான். தமிழில் இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘சர்வம்’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து உள்ளார்.இவர் நடித்த படங்களில் எல்லாம் இவரது நடிப்பு நிச்சயம் கவனிக்கப்பட்டுவிடும்.

குறிப்பாக நண்பன், மதராசபட்டினம், ராஜா ராணி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் இவரது நடிப்பு மிகவும் ரசிக்கும்படி இருக்கும். அதிலும் இன்று நேற்று நாளை படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.இப்படி ஒரு நிலையில் இவர் வரலாற்று வீர மங்கைகளான ஜான்சி ராணி, வேலு நாச்சியார், ராணி சென்னம்மா போன்றவர்களை போலவே வேடமிட்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

இதோ அந்த புகைப்படங்கள். இறுதியாக இவர் விஜய் நடித்த பிகில் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து கமலி from நடுக்காவேரி படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement