காதல் தோல்வியில் ராஜா ராணி 2 சீரியல் நடிகை போட்ட பதிவு ? – காரணம் இந்த சீரியல் நடிகர் தானா ?

0
396
riya
- Advertisement -

காதல் பிரிவில் ராஜா ராணி 2 கதாநாயகி பதிவிட்டு பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் தற்போது டாப் டிஆர்பி ரேட்டிங்கில் இருக்கிறது. அந்த வகையில் சீரியல் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்த தொடர் ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. அதோடு இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவின் பெண்ணெட் இயக்கி வருகிறார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் :

இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். பின் ஆல்யாவுக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். மேலும், சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா சமீபத்தில் தான் சீரியலில் விலகி இருந்தார்.

சீரியலில் விலகிய நடிகை:

இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு பதிலாக சீரியல் நடிகை வேறு ஓரு அர்ச்சனா என்பவர் தான் நடித்து வருகிறார். இப்படி சீரியலில் பல மாற்றங்கள் நடந்தாலும் சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் ஆதி, ஜெசியை காதலித்து கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விடுகிறார். பின் சரவணன் குடும்பத்திற்கு ஆதி செய்த வேலை தெரிய வருகிறது.

-விளம்பரம்-

ரியா காதல்:

ஜெசி- ஆதிக்கு திருமணம் நடக்குமா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் சந்தியா ரியாவின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரியா பதிவு:

ஆனால், இதுவரை இருவரும் தங்களுடைய காதல் குறித்து எந்த ஒரு தகவலையும் கூறவில்லை. இந்த நிலையில் தற்போது ரியா அவர்கள் சோகமான காதல் தோல்வி ஸ்டோரிகளை பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலுக்கும், ரியாவிற்கும் பிரேக்கப் ஆகிவிட்டதா? விஷால், ரியாவை ஏமாற்றியதால் தான் இப்படி இவர் காதல் தோல்வி ஸ்டோரிகளை பகிர்ந்து வருகிறாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு ரியா தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement