கூடிய சீக்கிரம் டைவர்ஸ் தான் – ராஜா ராணி சீரியலை கண்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள். வைரலாகும் புகைப்படம்.

0
13279
raja
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ராஜா ரணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது.

-விளம்பரம்-

அண்ணன், தம்பி, மாமியார், மருமகள் ஒற்றுமை மற்றும் ஒரு பெண்ணின் கனவை நினைவாக்க பாடுபடும் கணவனின் கதை. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார். தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த சீரியலில் சில எபிசோடுகள் ஆகவே ரொமான்ஸ் காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. அதிலும் சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசா சீத்துக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் வந்திருந்தது. இதுகுறித்து தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேருக்குமே குடும்பம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ராஜா ராணி 1 சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஆயிலா என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. அதேபோல் சித்துவும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்பட்ட திருமணம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்யப்போவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவருக்குமே குடும்பம் இருக்கிறது என்பதை கூட யோசிக்காமல் விஜய் டிவி இப்படிப்பட்ட காட்சிகளை எடுத்து ஒளிபரப்புகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் கூறியது, இவர்களுக்கு குடும்பம் இருப்பதை கூட நினைக்க மாட்டீர்களா? போவதை பார்த்தால் இவர்கள் இருவருமே விவாகரத்து வாங்கி விடுவார்கள் போல உள்ளது. தமிழ் சீரியலில் இந்த மாதிரி எல்லாம் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பது தேவையா? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த சீரியலை பார்க்கிறார்கள். இதில் போய் இப்படி எல்லாம் காட்சிகளை வைப்பதா? என்று விஜய் டிவியை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Advertisement