ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய நடிகை.! அவருக்கு பதில் யார்..! இதுதான் காரணமா..?

0
714
Raja-Rani-Derial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் டெலிவிஷன் அவார்டில், இந்த ஆண்டின் சிறந்த சீரியலுக்கான விருதையும் இந்த சீரியல் பெற்றது. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ்.

vinothini

இந்த சீரியலில், கார்த்திக் மற்றும் மானஸா என்ற இரு கதாபாத்திரத்திற்கு பிறகு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது கார்த்திக்கின் தங்கையாக வரும் வினோதினி என்ற கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் வைஷாலி என்ற நடிகை நடித்து வந்தார்.

ஆனால், சில மாதங்கள் கழித்து நடிகை கதாபத்திரத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக சன் டிவியில் ஒளிபரப்பான “நாதஸ்வரம்” தொடரில் நடித்து வந்த கீதாஞ்சலி என்பவர் “ராஜா ராணி” தொடரில் கார்த்திக்கின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

geethanjali

கீதாஞ்சலியின் முகம் ரசிகர்களுக்கு நன்றாக பரிட்சியமான நிலையில் தற்போது அவரும் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது கீதாஞ்சலி விஜய் டிவியில் “நிறம் மாறாத பூக்கள்” என்ற தொடரில் நடித்து வருகிறார் அதனால் கால் சீட் பிரச்சனையால் “ராஜா ராணி” தொடரில் இருந்து விலகியதாக தெரிகிறது. தற்போது கீதாஞ்சலிக்கு பதிலாக வேறொருவர் கமிட் ஆகியுள்ளார்.