ராஜா ராணி சீரியல் மீது தேர்தல் ஆணையம் நடடிக்கை எடுக்கனும் – கொதிக்கும் நெட்டிசன்கள். காரணம் இந்த வீடியோ.

0
1765

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடிகள் நிஜ வாழ்விலும் காதலித்து வந்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பின்னர் சஞ்சீவ் சமீபத்தில் தான் ஆல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு சஞ்சீவ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்துவருகிறார். ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சஞ்சீவிற்கு பதில் ‘திருமணம்’ சீரியல் நடிகர் சித்துநடித்து வருகிறார்.

- Advertisement -

ஆரம்பத்தில் இந்த தொடர் எதிர்பார்த்த அளவு ரீச் ஆகவில்லை ஆனால், கடந்த சில வாரமாக இந்த தொடர் கொஞ்சம் சூடுபிடித்து சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் நேற்று ஒளிபரப்பான காட்சியால் இந்த தொடர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக வலைத்தளத்தில் பல சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கதாநாயகி ஓட்டு போட்டு வருவார். அப்போது வீட்டில் இருக்கும் அவரது மாமியார் ஏன் ஓட்டு போட்ட என்று அவரை திட்டுவார்.

மேலும், எங்க வீட்டில் யாரும் ஒட்டு போட மாட்டோம் அதற்கு நீ மன்னிப்பு கேள் என்றும் கூறுவதோடு ஒட்டு போட்டதற்கு நீ தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறுவார். இதனை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் ஒட்டு போடுவது தப்பு என்று சொல்வது சட்ட விரோதம் இல்லையா இதனால் இந்த சீரியல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தொடர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது ‘என் கணவர் என் தோழன்’ தொடரின் காப்பி தான்.

-விளம்பரம்-

அந்த தொடரே இந்தியில் வெற்றியடைந்த ”தியா ஓர் பாதீ ஹம்’  என்ற தொடரின் ரீமேக் தான். அந்த தொடரை அப்படியே தமிழில் டப் செய்து விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பினர். இந்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் 927 எபிசோட் வரை மட்டும் தான் ஒளிபரப்பபட்டது.பின்னர் அந்த தொடரை நிறுத்திவிட்டனர். ”தியா ஓர் பாதீ ஹம்’ தொடரிலும் இதே காட்சி தான் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement