விக்ரம்ல அந்த சீன் என் படத்துல வரவேண்டிய சீன்னு நெனச்சேன் – கமல் முன்பே சொன்ன ராஜமௌலி.

0
452
vikram
- Advertisement -

கமல் நடித்த விக்ரம் படத்தின் ஒரு காட்சியை பார்த்து இயக்குனர் ராஜமவுலி வியந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலகில் நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-
vikram

மேலும், இவர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இறுதியாக கமல் நடிப்பில் வெளியாகி இருந்த ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார்.

- Advertisement -

விக்ரம் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருந்ததால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருந்தது.

வீடியோவில் 1 மணி நேரம் 19 நிமிடத்தில் பார்க்கவும் :

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

மேலும், படத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க செல்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். இதனால் விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருந்தது.

ரவுண்ட் டேபிள் மீட்டிங்:

இந்த படம் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததாக அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ரவுண்ட் டேபிள் மீட்டிங் நடைபெற்றது. இதில் கமலஹாசன், லோகேஷ், பிரிதிவிராஜ், ராஜமவுலி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விக்ரம் படம் குறித்து பேசி இருந்தார்கள். அதில் ராஜமவுலி, விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் கமல் பப்ளிகம் மென்று கொண்டு மீசையை முறுக்கி நடந்து வருவார். அந்த காட்சியை பார்த்து நான் பயங்கரமாக வியந்து விட்டேன்.

விக்ரம் பட காட்சி குறித்து ராஜமௌலி சொன்னது:

இந்த காட்சி நம்ம படத்தில் இல்லையே என்றெல்லாம் நினைத்திருந்தேன் என்று கூறியிருந்தார். உடனே கமலஹாசன், இந்த காட்சி எடுக்கும் போது நான் பலமுறை பப்ளிக்காம் சாப்பிடுவதை மறந்து விடுவேன். லோகேஷ் தான் அடிக்கடி ஞாபகம் செய்வார் என்று சொன்னார். இவர்களை தொடர்ந்து லோகேஷ், இந்த காட்சியை நான் பழைய விக்ரம் படத்தில் இருந்து தான் எடுத்தேன். அந்த படம் முழுவதுமே கமல் சார் பப்ளிகாம் மென்று கொண்டிருப்பார். அதை வைத்து தான் நான் இந்த காட்சியை வைத்தேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement