இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து திரைக்கு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி வசூல் சாதனையயையும் படைத்து இருந்தது. மேலும், படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது.

Advertisement

ஆஸ்கர் விருது :

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றனர். அதோடு இந்தியாவில் இருந்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற இரண்டாவது நபராக எம்.எம்.கீரவாணி உள்ளார்.

விருது சர்ச்சை :

ஆனால் RRR படத்திற்கு பணம் கொடுத்து தான் ஆஸ்கர் விருது வாங்கப்பட்டுள்ளது என்றும், பாடல் உண்மையான பாடலே கிடையாது என பல விதமான சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருக்கிறது. குறிப்பாக ஆஸ்கர் விருதை பெற பரப்புரைக்காக மட்டுமே ரூபாய் 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என்ற தகவல் அதிகமாக சோசியல் மீடியாக்களில் பேசப்பட்டு வரும் நிலையில் அதனை மறுத்துள்ளார் RRR பட இயக்குனர் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயன்.

Advertisement

இந்தியா சார்பில் அனுப்பப்படவில்லை :

இந்நிலையில் ஆஸ்கர் விருத்திற்காக இப்படம் இந்திரா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை. இதனால் RRR படத்தின் படக்குழு தனிப்பட்ட முறையில் படத்தினை ஆஸ்கார் நாமினேஷனுக்கு அனுப்பினார்கள். அதோடு இந்த விருதை பெற விளம்பரத்திற்காக 80கோடி ரூபாய் செலவு செய்த்தாக கூறப்படுகிறது. ஆனால் இதனை RRR படத்தின் தயாரிப்பளார் டிவிவி தன்யா மறுத்துள்ளார். மேலும் எனக்கும் RRR படத்தின் படக்குழுவுக்கு ராஜமௌலிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறினார்.

Advertisement

ராஜமௌலி மகன் பேட்டி:

இப்படி பட்ட நிலையில் படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆனா நிலையில் ராஜமௌலியின் மகன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் “ஆஸ்கர் விருத்திற்காக இந்தியா சார்பில் RRR படத்தை ஆஸ்கருக்கு அனுப்பாத காரணத்தினால் மிகுந்த வருத்தம். இந்த காரணத்தை மட்டும் வைத்து என்னுடை தந்தை ராஜமௌலி பணம் கொடுத்து ஆஸ்கர் வாங்கினார் என்று கூறுவது மிகவும் தவறான விஷயம். அப்படி யாராலும் வாங்கவும் முடியாது.

இதற்குத்தான் செலவு :

தொடக்கத்தில் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப 5 கோடி ரூபாய் வரையில் செலவில் 3 கடகாமாக செய்யலாம் என்று முடிவெடுத்தோம். நாமினேஷனுக்கு முன்னதாக 2முதல் 3 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டோம். ஆனால் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்ய திட்டமிட்ட நிலையில் 8 கோடி ரூபாய் செலவானது. ஏனென்றால் நியூயார்க் நகரில் படத்தை திரையிட நினைத்ததை விட அதிக செலவானது. இது மட்டும் தான் நாங்கள் ஆஸ்கர் விருத்திற்காக செய்த செலவு என்று கூறினார் ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயன்.

Advertisement