நடிகை சிவாத்மிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ராஜசேகர் வரதராஜன். இவர் தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின் இவர் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார். ஜீவிதாவும் தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகை தான்.
இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போதும் ராஜசேகர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சிவானி, சிவாத்மிகா ஆவார். இதில் சிவாத்மிகா தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார்.
தற்போது இவர் தமிழ் மொழியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்குகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சேரன், விஜய் டிவி ஜாக்லின், பிக் பாஸ் சரவணன், டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். சித்து குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.
சிவாத்மிகா பிறந்தநாள்:
இது ஒரு பக்கம் இருக்க, நடிகை சிவாத்மிகா எப்போதுமே சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருப்பவர். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ சூட் புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் சிவாத்மிகா சமீபத்தில் தன்னுடைய 23வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
சிவாத்மிகா புகைப்படம்:
இது குறித்து சிவாத்மிகா பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இவர் தன்னுடைய பிறந்தநாளில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படத்தை தான் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் மிகவும் கிளாமராக போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.