ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு ‘பாட்ஷா’ ரஜினி போல அந்த முதியவருக்கு ஏற்பட்ட சோகம்.

0
481
rajini
- Advertisement -

என்றென்றும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இன்று இவருடைய 72-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பெங்களூரில் நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. மேலும், இவருடைய நடிப்புக்கு இவரே இணை என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பிலும், ஸ்டைலிலும் மக்களை தன்பக்கம் கவர்ந்தவர்.

-விளம்பரம்-

1975ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால், இவர் இதற்கு முன்பே தெலுங்கில் பைரவி என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். இப்படி ரஜினி அவர்கள் அன்று தொடங்கி இன்று வரை இடைவெளி இல்லாமல் நடித்து கொண்டு வருகிறார். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணத்தா படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள்.

- Advertisement -

இதை ரசிகர்கள் வருடம் வருடம் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் இன்றும் தங்களுடைய தலைவரின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார்கள். சினிமா பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பதிந்திருக்கிறார்கள். மம்முட்டி, சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதேபோல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகர் ரஜினிகாந்தின் படத்தை நெஞ்சில் வரைந்து தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை கூறியிருக்கிறார். வழக்கம்போல் இவருடைய பிறந்த நாளன்று ஏதாவது புது படத்தின் அப்டேட் கிடைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ரஜினிகாந்தின் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருக்கிறார்கள். அவர்கள் பூசணிக்காய் சுற்றியும், தேங்காய் உடைத்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் பாட்சா கெட்டப்பில் முதியவர் ஒருவர் ரஜினியின் இல்லத்திற்கு வந்திருக்கிறார். ரஜினியின் தீவிர ரசிகரான இந்த முதியவர் ரஜினியை பார்ப்பதற்காக ரொம்ப நேரம் நின்று இருக்கிறார். பின் திடீரென அவர் மயக்கம் போட்டு விழுந்து இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

Advertisement