ரஜினி- முருகதாஸ் படத்தின் கதாநாயகி இவரா? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

0
833
Rajini-16
- Advertisement -

ரஜினி தற்போது பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை தொடர்ந்து அடுத்தப் படம் குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்தான் என்பது 90 சதவீதம் முடிவாகி விட்டது. படத்தை தயாரிப்பதாக சான்பிக்சர்ஸ் நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது.

-விளம்பரம்-

ஆனால் தற்போது அதில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலகி உள்ளது. சர்கார் விவகாரத்தில் சன் பிக்சர்ஸுக்கும் ஏ ஆர் முருகதாஸுக்கும் ஏற்பட்ட மனக்க்சப்பே இந்த முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும்,இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் என்ற தகவல் வெளியாகாத நிலையில் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்பாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் இந்த படத்திற்கு ‘நாற்காலி ‘ என்று தகவல் வைத்திருப்பதாகவும் இயக்குனர் முருகதாஸ் இந்த படத்தை அரசியல் கலந்த கதையாக எடுக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், ஏற்கனவே கத்தி, சர்கார் போன்ற படங்கள் அரசியல் கதைக்களம் என்பதால் அடுத்து இயக்கப்போகும் படம் அரசியல் கதையாக இருக்காது என்று முருகதாஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

-விளம்பரம்-
Advertisement