தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கம் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி.

சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி மகள் ஐஸ்வர்யா பேசிய சங்கி பற்றிய விஷயம் பெரும் சர்ச்சையானது. இந்த விழாவில் பேசிய அவர் ”சங்கி என்ற வார்த்தை முதலில் எனக்கு தெரியாது, அதை பற்றி தெரிந்த பிறகு ரொம்ப வேதனை அளிக்கிறது. என் அப்பா சங்கி கிடையாது என்பதை ஒரு இயக்குநராக சொல்ல பெருமைப்படுகிறேன்.

Advertisement

மேலும் ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் ஏன் ’லால் சலாம்’ போன்ற படத்தில் நடிக்கணும். சங்கியாக இருந்தால் அவர் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படத்தை பண்ண முடியாது. ஒரு மனித நேயரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும். இந்த படத்தை அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள். நீங்க எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை பெருமைப்படுத்த வேண்டும். ரஜினிகாந்த் சங்கி இல்லை’ என்று கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினியிடம் ‘லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் காகத்தான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று சொல்கிறார்களே என்று கேள்வி எழுப்பியதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கேயும் சொல்லவில்லை அப்பா ஒரு ஆன்மீகவாதி அனைத்து மதங்களையும் விரும்பவார். அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பது தான் அவரின் பார்வை என்று பதில் அளித்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் சனாதனம் குறித்து ரஜினி பேசி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள ரஜினி ‘ இஸ்லாம் கிறிஸ்தவம் பௌத்தம் என்று எல்லா மதங்களுக்கும் ஸ்தாபகர்கள் இருந்தார்கள். அவர்கள் ஸ்தாபகம் பண்ணார்கள் அல்லது அவர்களுடைய சீடர்கள் ஸ்தாபகம் செய்தார்கள். ஆனால் இந்து மதத்திற்கு மட்டும் ஸ்தாபகர்கள் கிடையாது. இதுதான் சனாதனம். சனாதனம் என்றால் பழசு, ஆதி அப்போது இருந்த ரிஷிகள் தியானத்தில் இருந்த போது தெரியாமல் வந்த சத்தங்கள் தான் வேதம்.

Advertisement

அந்த வேதத்தில் பிரம்மர்தான் இயற்கையானார். அதை அனுபவிக்க மனிதர்களை உருவாக்கினான். அவனை இயங்க வைக்க பஞ்ச பூதங்களை உருவாக்கினான். அவனுக்குள் மனசு என்கிற புத்தியை வைத்தான். இதுதான் வேதங்களில் இருக்கும் முக்கியமான விஷயங்கள் இதை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அதனால் தான் அந்த வேதங்களை எளிமையாக்கி உபநிஷாக்கள் அனைவருக்கும் புரியும்படி அதை மாற்றினார்கள். அதில் நான் இந்த அண்டத்தை சேர்ந்தவன் கடவுளின் ஒரு பகுதி என்பதுதான். அந்த உபநிஷத்தை கூட அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியாது என்பதற்காக அதையும் எளிமையாக்கியதுதான் பகவத் கீதை. பகவத் கீதையில் கிருஷ்ணர் என்பது ஒரு கடவுள் கிடையாது. அவர் ஒரு அதீத உணர்வு. பரமாத்மா ஜீவாத்மாவுடன் பேசுவது தான் பகவத் கீதை.

Advertisement