விஜய் மற்றும் விஷாலின் அரசியல் என்ட்ரி குறித்து ரஜினி அளித்திருக்கும் பதில் தற்போது வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார் ரஜினி. ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசிய காக்கா கழுகு கதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து லியோ படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் விஜய் பேசிய சிங்கம், கழுகு கதை ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது போலவே இருந்தது. இதனால் விஜய் – ரஜினி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து சண்டை வெடித்து வந்தது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய ரஜினி ‘ நான் சொன்ன அந்த காக்கா- கழுகு கதையை அப்படியே வேற மாதிரி சோசியல் மீடியா பரப்பி விட்டார்கள். நான் விஜய்க்கு சொன்ன மாதிரி சோசியல் மீடியாவில் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். அது எனக்கு நிஜமாகவே வருத்தம் அளித்தது. விஜய் என் கண் முன்னாடி வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படத்தின் சூட்டிங் போது அவரை நான் பார்த்தேன்.

அப்போது அவருக்கு 13 வயது. சூட்டிங் முடித்த பிறகு அவருடைய அப்பா சந்திரசேகர் என்னிடம் விஜய் அறிமுகம் செய்து இருந்தார்.பின் அவனுக்கு நடிப்பில் விருப்பம் இருக்கிறது என்று சொன்னார். நான், படிக்கிற பையன். படித்து முடித்து வந்து நடிக்கட்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்லினேன். அதற்குப் பிறகு விஜய் கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு அவர் வந்திருக்கிறார்.

Advertisement

அவர் இந்த இடத்திற்கு வந்திருப்பதற்கு காரணம் அவருடைய ஒழுக்கம், உழைப்பு, திறமை தான். அடுத்து அவர் அரசியலிலும் போக இருக்கிறார். இதில் எனக்கும் விஜய்க்கும் போட்டி என்று சொல்வது நிஜமாகவே மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.விஜய்யே ஒருமுறை சொல்லி இருக்கிறார். எனக்கு நான் தான் போட்டி. என் படத்துக்கும் நான் தான் போட்டி என்று சொல்லி இருந்தார். விஜய் எனக்கு போட்டி என்று நான் நினைச்சா எனக்கு மரியாதையே இல்ல, எனக்கு கௌரவம் இல்ல. விஜய்யும், ரஜினிகாந்த் தனக்கு போட்டியின்னு சொன்னா அவருக்கும் மரியாதை இல்லை என்று கூறி இருந்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் ரஜினி சமீபத்தில் செய்தியாளட்களை சந்தித்து இருந்தார். அப்போது “விஜய், விஷால் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதாகச் சொல்லி வருகிறார்கள். முதல்வர் பதவி அவ்வளவு எளிதானதாகத் தெரிகிறதா?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், “நோ பாலிடிக்ஸ்… அரசியல் குறித்த கேள்வி கேட்க வேண்டாம்” எனக் கூறி தவிர்த்துவிட்டார்.

Advertisement