இப்போ நீங்கதா இன்ஸ்பிரேஷன் உங்க கிட்ட இருந்து இத கத்துகனும்னு ரஜினி சார் சொன்னாரு – சிலாகித்த சிவகார்த்திகேயன்

0
413
Ayalaan
- Advertisement -

அயலான் படம் பார்த்துவிட்டு ரஜினி கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் அயலான். இந்த படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படம் சீக்கிரமாகவே உருவானாலும் கிராபிக்ஸ் பணிகளால் பல வருடங்கள் தள்ளி கொண்டே போனது.

- Advertisement -

அயலான் படம்:

ஏலியன் ஜானரில் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். வேற்று கிரகத்தில் உள்ள கல் ஒன்று பூமியில் விழுகிறது. அது வில்லன் கையில் கிடைக்கிறது. அவன் மைனிங் போட்டு பூமியை ஓட்டை போட்டு சில ஆயுதங்களைத் தேட முயற்சிக்கிறார். அப்போது அதில் இருந்து வெளிவந்த நச்சு வாயால் நிறைய மக்கள் இறக்கிறார்கள். இது அந்தக் கல் வந்த கிரகத்தில் வாழும் உயிரினமான ஏலியனுக்கு தெரிகிறது. பின் ஏலியன், பூமி முக்கியம்.

படத்தின் கதை:

அதைக் காப்பாற்ற வேண்டும் என்று ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது. அந்த ஏலியன் புழு பூச்சிக்கு கூட துரோகம் நினைக்காத ஹீரோ சிவகார்த்திகேயனிடம் செல்கிறது. பிறகு மைனிங் ப்ராஜெக்ட் சென்னைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் அந்த ஏலியன் இருவரும் இணைந்து சென்னையை காப்பாற்றினார்களா? அந்த வில்லனை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்களா? பூமிக்கு வந்த அந்த கல்லால் மக்களுக்கு நல்லது நடக்கிறதா? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் பேட்டி:

மேலும், குழந்தைகள் கொண்டாடும் விதமாக இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலருமே இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், ரஜினிகாந்த் சார் அயலான் படத்தை பார்த்து என்னை அழைத்து பாராட்டி இருந்தார்.

ரஜினி சொன்னது:

எப்படி நீங்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள் ? உங்கள் படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. இப்போது உங்களுடைய படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறது. உங்களுடைய பெரிய படங்கள் எல்லாம் மக்களும் கொண்டாடுகிறார்கள். இதே மாதிரி நீங்கள் நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னதாக சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.

Advertisement