முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் தனது பணிப் பெண்ணிடம் ரஜினி நடந்துகொண்ட விதம். கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
834
- Advertisement -

பெண் உதவியாளரிடம் ரஜினிகாந்த் நடந்திருக்கும் செயல் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உலகளவில் மிகப் பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர் ஆவார். இவர் நீடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் ஆகாஷ், நிஷா ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது.

-விளம்பரம்-

தற்போது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சாண்ட் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் ஜூலை மாதம் 12ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. தற்போது திருமணத்திற்கு முந்தையதாக நடைபெற இருக்கும் விழாக்கள் தொடங்கி இருக்கிறது.

- Advertisement -

முகேஷ் அம்பானி மகன் திருமணம்:

அந்த வகையில் நேற்று குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி இன்று வரை இந்த விழா நடைபெற்று இருக்கிறது. அதோட இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்று இருந்தது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு என்று பலர் வந்து இருக்கிறார்கள்.

திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்:

அதேபோல் இந்தியாவில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலுள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், இயக்குனர் அட்லீ என பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமண விழாவில் பங்கேற்றிருக்கிறார். அவர் தன்னுடைய மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் வந்திருக்கிறார். மேலும், இவர்களுக்கு உதவியாளராக ஒரு பெண்மணியை அழைத்து வந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் செய்த செயல்:

அப்போது ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தை அழைத்து போட்டோ எடுக்க பார்த்தார். அந்த சமயம் அந்த பெண் உதவியாளரும் ரஜினிகாந்த் பக்கம் வந்து நிற்கும் போது நீ ஓரமாக போய் நில் என்று கை சைகை செய்கின்றார். அந்த பெண்ணும் ஏதும் பேசாமல் அமைதியாக சென்று விடுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலருமே ரஜினி விமர்சித்தும் அவருடைய செயலை கண்டித்தும் வருகிறார்கள்.

ரஜினி திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த படம் லால் சலாம் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதனை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி அவர்கள் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது.

Advertisement