தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்திற்கு, சௌந்தர்யா மற்றும் ஐஸ்வ்ர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். மேலும், சௌந்திரயா கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்ங்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. பின்னர் இருவரும் குடும்ப நீதிமன்றத்தில் விவகாரத்து கோரினார்கள்.
பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த மாரு திருமணம் செய்யவுள்ளதாக தகவல்ககள் வெளியாகியது. கோவையை சேர்ந்த கோவை முன்னாள் எம் எல் ஏவின் மகன் விசாகன் என்பவருடன் இரண்டாம் திருமணம் நடைபெற உள்ளது.
வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி சவுந்தர்யா மற்றும் விசாகன் திருமண வரவேற்பு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜானவாசத்தில் நடைபெற உள்ளது.மேலும், திருமணத்திற்கு பின் வரவேற்பு நிகழ்ச்சி 12-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் முதன் முறையாக சௌந்தர்யா மற்றும் விசாகன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.