ரஜினி வீட்டிற்குள் நுழைந்த பசு.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

0
574
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இப்படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத்.

-விளம்பரம்-

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் இன்று பூஜையுடன் . அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் விடீயோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. விஜய்க்கு சர்கார், ரஜினிக்கு ‘தர்பார்’ என்று ஏ.ஆர். முருகதாஸ் மிரட்டலான பெயரை வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில்  இன்று அவரது வீட்டிற்குள் ஒரு பசுமாடும், கன்னு குட்டியும் நுழையும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரித்த போது ஸ்பெஷல் கோ பூஜை செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதே போல நதிகளை இணைக்கும் திட்டத்தை ப ஜ க கட்சி அறிவித்துள்ளதை ரஜினி வரவேற்று கருத்து தெரிவித்திருந்தார். இதனால் வரும் தேர்தலில் ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தான் என்று அதிமுக கூட்டணி மற்றொரு புறம் பேசி வருவது ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement