ஓடிடி தளத்தில் பல கோடிக்கு விலை போன ரஜினியின் ஜெயிலர் படம்- இவ்ளோ கோடியா! உற்சாகத்தில் ரசிங்கர்கள்

0
3510
- Advertisement -

பல கோடிக்கு ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஓடிடி ரைட்ஸ் வாங்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கேற்ப நெல்சனின் முந்தைய படமான விஜயின் வாரிசு படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், பல முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினி அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இவர் யோகி பாபு உடன் செய்யும் காமெடியும் பயங்கரமாக ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தின் வசூல்:

மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. இந்த படம் வெளியான முதல் வாரத்தில் 375 கோடியும், இரண்டாவது வாரத்தில் 175 கோடியும் வசூலித்து இருக்கிறது. இதுவரை ஜெயிலர் படம் 525 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஓடிடி ரைட்ஸ் குறித்த உரிமை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

OTT Rights குறித்த தகவல்:

அதாவது, netflix ஓடிடி தளத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தை வெளியிட நூறு கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். செப்டம்பர் மாதம் இந்த படம் netflix மற்றும் சன் நெக்ஸ்ட் என இரண்டு தளத்திலும் வெளியாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்தின் இந்தி சேட்டிலைட் உரிமை 75 கோடிக்கு விலை போய் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement