மறைந்த கேப்டன் விஜயகாந்த் படத்தில் போட்டி போட்டு ரஜினிகாந்த்-கமல் நடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80 காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு நடித்த காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் விஜயகாந்த்.

இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. போலீஸ் கதாபாத்திரம் என்றாலே விஜயகாந்த் தான் என்று சொல்லும் அளவிற்கு அந்த உடையில் கம்பீர தோற்றத்தில் காட்சியளித்தவர். அதுமட்டுமில்லாமல் எத்தனை கோடி கொடுத்தாலும் தமிழ் மொழி தவிர மற்ற மொழி படங்களில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை கொண்டவர். இவர் தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ் மொழியில் மட்டும் தான் நடித்திருந்தார்.
ரஜினி -கமல் பற்றிய தகவல்:
அதோடு ரஜினி, கமல் எல்லாம் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருந்தார்கள். அந்த காலகட்டத்திலேயே தமிழ் மொழியில் ஹிட் ஆன பல படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்து இருந்தார்கள். இந்த நிலையில் விஜயகாந்தின் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்
படத்தினுடைய தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

சட்டம் ஒரு இருட்டறை:
அதாவது, நடிகர் விஜய்யினுடைய தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் விஜய மக்கள் மத்தியில் பிரபலமாய் அறியப்பட்டார். இந்த படம் தமிழ் மொழியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

ரீமேக் செய்த படம்:
இதனை அடுத்து இந்த படத்தை இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்ய பட குழுவினர் முடிவெடுத்திருந்தார்கள். இது தொடர்பாக கமலஹாசன்- ரஜினிகாந்த் இடம் கேட்டிருந்தார்கள். படத்தின் கதை பிடித்திருந்தால் அவர்களும் உடனடியாக ஓகே சொல்லி விட்டார்கள். இதை அடுத்து மலையாளத்தில் கமலஹாசனும், இந்தியில் ரஜினிகாந்த்தும் வைத்து இந்த படத்தை ரீமேக் செய்து இருந்தர்கள்.
விஜயகாந்த் மறைவு:
மூன்று மொழியிலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையை செய்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஒரே படத்தின் கதையை மூன்று ஹீரோக்கள் நடித்து பிளாக்பஸ்டர் கொடுத்தது என்பது மிக அபூர்வமான ஒன்று. தமிழ் சினிமாவின் நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல் நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.






