Dad’s Little Princessஐ நம்பினால் இப்படித்தான் – லால் சலாம் படத்தின் ரஜினி கெட்டப்பை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
467
Lalsalam
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் ஒன்று, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் கணவரான தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதுதான் அவரது முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் எந்த அளவு வெற்றி பெற்றது என்பதை விட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார் அதன் பின்னர் 8 ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை எடுத்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் ஏழாம் தேதி தொடங்கியது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகனாக நடித்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் தங்கையாக பிரபல நடிகை ஜீவிதா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர் செந்தில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ரஜினியின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டு இருந்தது.

இப்படத்தின் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். வெளிவந்த இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த லுக் ரஜினிகாந்திற்கு செட்டாகவில்லை என கூறி வருகிறார்கள். இதனால் வடிவேலு, ஓமக்குச்சி நரசிம்மன், லிவிங்ஸ்டன் என்று பலரது புகைப்படங்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். மேலும், dad’s little princesஐ நம்பினால் இப்படி தான் என்று கேலி செய்து வருகின்றனர்.  

-விளம்பரம்-

ஏற்கனவே ரஜினி அவரது மற்றொரு மகளான சௌந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தில் நடித்திருந்தார். பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து சௌந்தர்யா படம் எடுப்பதை நிறுத்திவிட்டார்.

ஒரு காலத்தில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்த ரஜினிகாந்த் தமிழ் வருடங்களாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார். 2.0 திரைப்படத்திற்குப் பின்னர் வெளியான பேட்ட திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. ஆனால், அதன் பின்னர் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement