ஸ்ரீ தேவியை ஒருதலையாக காதலித்தாரா ரஜினி? ரஜினி மருத்துவமனையில் இருந்த போது ஸ்ரீதேவி செய்த தியாகம்?

0
61
- Advertisement -

ஸ்ரீதேவி- ரஜினி இடையேயான காதல் விவகாரம் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் 45 வருடங்களுக்கு மேலாக சினிமாவுலகில் பயணித்து கொண்டிருக்கின்றார். அதோடு இவர் திரையுலகில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது இருக்கும் பல நடிகைகளுடன் சேர்ந்து நடித்து இருந்தாலும் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியை யாராலும் மறக்க முடியாது. சினிமாவில் மட்டுமில்லாமல் இவர்கள் இருவருக்கும் நல்ல உறவு இருந்தது. ஆனால், அந்த உறவு காதலா? நட்பா? என்று பலருமே குழப்பத்தில் இருந்தார்கள் என்று சொல்லலாம்.

- Advertisement -

ஸ்ரீதேவி-ரஜினி படங்கள்:

முதன்முதலாக நடிகர் ரஜினி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து நடித்த படம் மூன்று முடிச்சு. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு சித்தியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். அப்போது ரஜினிகாந்த்துக்கு 25 வயது, ஸ்ரீதேவிக்கு வெறும் 13 வயது தான். இந்த படத்தில் இருந்து தான் இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு தொடர்ந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து அபூர்வராகங்கள், 16 வயதினிலே, நான் ஜானி, வணக்கத்திற்குரிய காதலியே போன்று 22 படங்களில் நடித்திருக்கின்றார்கள்.

ஸ்ரீதேவி-ரஜினி நட்பு:

பெரும்பாலும் இவர்கள் ஜோடியாக தான் நடித்திருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் இவர்கள் இருவரும் அண்ணன்- தங்கையாக நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இவரும் படங்களில் சேர்ந்து நடிப்பதற்கு முன்பே ஸ்ரீதேவியின் குடும்பத்துடன் ரஜினி நெருக்கமான பழக்கத்தில் இருந்தார். குறிப்பாக ஸ்ரீதேவியின் தாயாருக்கும் ரஜினிக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இதனாலே ரஜினி அவரை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார்.

-விளம்பரம்-

பெண் கேட்க சென்ற ரஜினி:

இருவரும் ஒன்றாக படங்களின் நடித்தாலும் இவர்களுக்குள் காதல் இருந்ததே இல்லை. ஆனால், ஒரு முறை பத்திரிக்கையில் இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் ஸ்ரீ தேவியை பெண் கேட்டு ரஜினிகாந்த் சென்றிருந்ததாக கூறியிருந்தார். அப்போது ஸ்ரீதேவிக்கு 16 வயது. ஸ்ரீதேவி வீட்டு கிரகப்பிரவேசம் விழாவின்போது அவருடைய இல்லத்திற்கு ரஜினி சென்றிருக்கிறார். அப்போது கரண்ட் கட் ஆனதால் அந்த பேச்சை அப்படியே ரஜினி நிறுத்திவிட்டார் என்று பிரபலம் ஒருவர் கூறியிருந்தார்.

ஸ்ரீதேவி செய்த பிராத்தனை:

அதற்குப் பின்னும் இவர்களுடைய நட்பு பல வருடமாக நீடித்திருந்தது. அந்த வகையில் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தபோது ரஜினிக்காக, ஸ்ரீதேவி 7 நாட்கள் விரதம் இருந்து அவருக்காக கோயிலில் பிரார்த்தனை எல்லாம் செய்திருந்தார். அந்த அளவிற்கு மரியாதை கலந்த நட்புடன் ரஜினியும்- ஸ்ரீதேவியும் இருந்தார்கள். இன்னும் இவர்களுடைய நட்பு குறித்து சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு தான் இருக்கிறது.

Advertisement