டெல்லியில் விருது வாங்கிய ரஜினி அவர்கள் தன்னோடு இந்த உயரத்திற்கு காரணம் அவன் தான் என்று கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு தான். பெங்களூரில் 1970 ஆம் ஆண்டு மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக ராஜ்பகதூர், கண்டக்டராக ரஜினிகாந்தும் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தார்கள். அப்போது ரஜினி பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் ஸ்டைலை பார்த்து ராஜ்பகதூர் அசந்து விட்டார்.

அவரது வேகமான நடை, தலையை கோதுவது, ஸ்டைல் என எல்லாத்தையும் ராஜ்பகதூர் கண்டறிந்தார். ரஜினிக்கு ஆரம்பத்திலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டியூட்டில் பயிற்சிபெற ரஜினியை கட்டாயப்படுத்தி ராஜ்பகதூர் அனுப்பி வைத்தார். முதன்முதலாக இவரை சினிமா உலகில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் கே பாலசந்தர் தான். அன்று தொடங்கி இன்று வரை 70 வயது ஆகியும் ரஜினி நிற்காமல் சினிமா உலகில் ஜொலித்து கொண்டிருக்கிறார். மேலும், ரஜினிகாந்த் அவர்கள் தேசிய விருதுகள், பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற பல விருதுகளை வாங்கியுள்ளார்.

இதையும் பாருங்க : பூக்கள் நிறைத்த நீச்சல் குளத்தில் குளு குளு புகைப்படத்தை வெளியிட்ட பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்.

Advertisement

இந்த நிலையில் இன்று 67வது தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமா உலகில் இந்த விருதை சிவாஜி, எம்.ஜி.ஆர். மட்டும் தான் வாங்கி உள்ளார்கள். மேலும், இந்த விருது வாங்கிய நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் கூரியது, இதை வாங்குவதை நான் பெருமை கொள்கிறேன். இந்த விருதை எனது குரு கே பாலச்சந்தர் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். அடுத்தது தந்தையைப் போல் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆன்மீகத்தையும் சொல்லி தந்த எனது சகோதரர் சத்தியநாராயணாவுக்கு நன்றி.

எனது நண்பரும் என்னுடன் பணியாற்றிய சக ஊழியர் டிரைவர் ராஜ் பகதூருக்கு நன்றி என்று கூறியிருந்தார். எத்தனை உச்சத்திற்கு போனாலும் தன்னை தூக்கி விட்டு கைகளை எப்போதும் மறக்கக்கூடாது என்பதை ரஜினி நிரூபித்து விட்டார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் ஹாட்ஸ் ஆப் தலைவா என்று பாராட்டி வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement