ரஜினிகாந்த் தான் படத்திற்கு பணம் அதிகமாக கேட்க ஆரம்பித்தார் என்று விஜய் ரசிகர்கள் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர்” படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஷாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து இருந்தார்கள். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு இருந்தார்கள். இதை அடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

Advertisement

ரஜினி படங்கள்;

அதன் பின் தலைவர் 170 வது படத்தை லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு பின் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே ரஜினி- விஜய் ரசிகர்கள் இடையே சோசியல் மீடியாவில் பனிப்போர் நடந்து கொண்டிருக்கின்றது.

Advertisement

விஜய்-ரஜினி சர்ச்சை:

சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சையில் தொடங்கிய இவர்களுடைய சண்டை தற்போது படத்தின் வசூல் வரை வந்து நின்றுகின்றது. அந்த வகையில் ஜெயிலர் சாதனை லியோ முறியடிக்கும் என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் கூறியிருந்தார்கள். அதற்கேற்ப லியோ படம் வெளியாகி இருக்கிறது. மேலும், உலகம் முழுவதும் லியோ படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களை விமர்சித்து பேசி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம், லியோ லாபகரமான படமாக எங்களுக்கு அமையவில்லை. காரணம், இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவு ஷேர் பங்கீடு வாங்கி இருக்கிறார்கள். பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை விரும்பி போடவில்லை.

Advertisement

லியோ ஷேர் குறித்த சர்ச்சை:

அந்த அளவு அதிகமான ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்களையும் கசக்கி பிழிந்து விட்டார்கள். படம் வசூல் அதிகமாக இருந்தாலும் அதில் எங்களுக்கு பிரயோஜனமே இல்லை. எங்களிடம் 80 சதவீதம் வாங்கி இருக்கிறார்கள். இது என்ன நியாயம்? இந்த படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால் இப்போது கிடைத்துள்ள தியேட்டரில் பாதி கூட லியோவுக்கு கிடைத்திருக்காது என்று பேசி இருந்தார்கள். உடனே ரஜினி ரசிகர்கள் விஜய்யை தாக்கி பேசி இருந்தார்கள். ஆனால், இதற்கு எல்லாம் முதற்காரணம் ரஜினி தான் விஜய் ரசிகர்கள் அண்ணாமலை படத்தின் போது ரஜினி பேசிருக்கும் பழைய வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்கள்.

அதில் ரஜினி, நான் அதிக பணம் கேட்டது உண்மை தான். படத்தை பற்றி எனக்கு நன்றாக தெரிந்து தான் பணத்தை கேட்டேன். படம் ஓடவில்லை என்றால் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன். படம் ஓடியது என்றால் எனக்கு பணத்தை கொடுக்க வேண்டாம். அதிலிருந்து பங்கு தர வேண்டாம். எவ்வளவு லாபம் கிடைத்தது என்று சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். நீங்கள் வேலை காட்ட ஆரம்பித்து விட்டால் நானும் வேலை காட்டுவேன் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள் .

Advertisement