ரஜினி, விஜய் முதல் மோகன் லால் வரை – மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றிய பிரபலங்கள் – வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் வைத்த ரஜினி.

0
396
modi
- Advertisement -

பிரதமர் மோடியின் கோரிக்கையை ரஜினி உட்பட திரையுலக பிரபலங்கள் நிறைவேற்றி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்து டெல்லியில் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டிருந்தார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

-விளம்பரம்-

சிறப்பாக கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசியக் கொடியை ஒளிர விடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

75வது சுதந்திர தின விழா:

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா முழுவதிலும் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டும் வைத்திருக்கிறார். அதனால் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று தன்னுடைய ட்விட்டர் கணக்கில் உள்ள தனது முகப்பு பக்கத்தில் தேசியக்கொடி புகைப்படத்தை வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றிய பிரபலங்கள்:

இவரை தொடர்ந்து நடிகர் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, பாடகி சித்ரா, இயக்குனர் செல்வராகவன், இயக்குனர் மோகன்ஜி, நிர்மலா சீதாராமன் உட்பட பல பிரபலங்கள் தங்களுடைய சோசியல் மீடியாவில் முகப்பு புகைப்படங்களை தேசியக் கொடியாக மாற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடியின் கோரிக்கையை பிரபலங்கள் நிறைவேற்றி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

மோடி வைத்த கோரிக்கை:

அதாவது, நாடு முழுவதும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் வகையில் மோடி கூறியிருந்தார். அந்த வகையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன்பு தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. இதேபோல் பனையூரில் உள்ள விஜய்யின் மக்கள் இயக்கம் அலுவலகத்திலும், விஜய் இல்லத்திலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது.

தேசிய கொடியை ஏற்றிய பிரபலங்கள்:

மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோர் இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றி இருக்கின்றனர். இந்தி நடிகர் அமீர்கான் தனது வீட்டின் பால்கனியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இருக்கிறார். இயக்குனர் காஷ்மீர் பைல்ஸ் பட புகழ் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரியும் தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார். தற்போது அதற்கான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், ரஜினியும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவர் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துமாறு வீடியோ மூலம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

Advertisement