Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சொந்த ஊரில் அமைக்கப்பட்ட ரஜினி பெற்றோர்களின் நினைவிடத்தால் தீர்ந்த ஊர் மக்களின் அத்யாவசிய பற்றாக்குறை. முதல் முறையாக நேரில் சென்ற ரஜினி
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சொந்த ஊரில் அமைக்கப்பட்ட ரஜினி பெற்றோர்களின் நினைவிடத்தால் தீர்ந்த ஊர் மக்களின் அத்யாவசிய பற்றாக்குறை. முதல் முறையாக நேரில் சென்ற ரஜினி

A
எழுதியவர்Arun31 ஆகஸ்ட், 2023 அன்று 07:11 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

முதன் முறையாக சொந்த ஊரில் அமைந்து இருக்கும் தனது பெற்றோர்களின் நினைவிடத்திற்கு நேரில் சென்று வழிபட்டார் ரஜினிகாந்த். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் தான் நாச்சிகுப்பம். இந்த கிராமத்தில் தான் ரஜினிகாந்தினுடைய மூதாதையர்கள், பெற்றோர்கள் எல்லோரும் வாழ்ந்தனர். இன்றும் ரஜினிகாந்த் உடைய உறவினர்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் அவர்கள் தங்கள் உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

சொந்த ஊரில் அமைக்கப்பட்ட ரஜினி பெற்றோர்களின் நினைவிடத்தால் தீர்ந்த ஊர் மக்களின் அத்யாவசிய பற்றாக்குறை. முதல் முறையாக நேரில் சென்ற ரஜினி

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய சொந்த கிராமத்தில் தன்னுடைய பெற்றோரானா ரானோஜிராவ் - ராம்பாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் அளவில் நிலத்தை வாங்கி இருந்தார் ரஜினி.பின் தன்னுடைய அண்ணன் சத்தியநாராயண ராவ் மூலம் அந்த நிலத்தில் அடிகல்லும் நாட்டினார். நிலத்தைச் சுற்றி வேலையும் அமைத்து பெயர் பலகையும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு அந்த நிலத்தில் எந்தவித பணிகளும் செய்யவில்லை.

ரானோஜிராவ் - ராம்பாய் நினைவகம்:

ஆனால், இந்த இடத்தில் ரஜினி உடைய ரசிகர்கள் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாச்சிகுப்பம் கிராமத்தில் உள்ள தங்களுடைய நிலத்தை ரஜினி உடைய அண்ணன் பராமரித்து வருகிறார்.தற்போது இந்த நிலத்தில் ரஜினியின் பெற்றோரானா ரானோஜிராவ் - ராம்பாய் ஆகியோரின் சிலைகளை அமைத்து நினைவுகள் கட்டப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்திலிருக்கும் தனது தாய் தந்தையின் நினைவு மண்டபத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்@rajinikanth #Rajinikanth #SuperstarRajinikanth #Jailer #Krishnagiri #Jayaplus pic.twitter.com/4fSNPw6ig7

— Jaya Plus (@jayapluschannel) August 31, 2023

ஊர் மக்களுக்கு நடந்த நன்மை :

அது மட்டும் இல்லாமல் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கி வருகின்றனர். தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்து ரஜினியின் அண்ணன் கூறியிருப்பது, கடந்த 2022 ஆம் தேதியே என்னுடைய பெற்றோருக்கு நினைவகம் கட்டி முடிக்கப்பட்டது.கிராம மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு அங்கிருந்து குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

மக்களின் குறை :

மேலும், இங்கு செய்யப்படும் பணிகளை எல்லாம் ரஜினிக்கு வீடியோக்கள், படங்களை மூலம் எடுத்து அனுப்பி வைக்கிறோம். அடிக்கடி தகவல்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இங்கு வரவேண்டும் என்பது ரஜினிக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் அவரால் வர முடியவில்லை. இதுகுறித்து அந்த ஊர் மக்கள் பேசுகையில் இதுவரை ஒரு முறை கூட இங்கு வரவில்லை. அதுதான் எங்களுக்கு மனக்குறையாகவே இருக்கிறது.

சொந்த ஊரில் அமைக்கப்பட்ட ரஜினி பெற்றோர்களின் நினைவிடத்தால் தீர்ந்த ஊர் மக்களின் அத்யாவசிய பற்றாக்குறை. முதல் முறையாக நேரில் சென்ற ரஜினி

முதல் முறையாக வந்த ரஜினி :

அவர் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக இங்கு வந்திருக்க வாய்ப்புஇருந்து இருக்கும். தற்போது அவர்களின் பெற்றோருடைய சிலை வைத்து நினைவகம் அமைக்கப்பட்டிருப்பதால் ரஜினி ஒரு முறையாவது வருவார் என்று நம்புகிறோம் என்று கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது பூர்விக கிராமமான நாச்சிக்குப்பத்துக்கு, தனது சகோதார் சத்தியநாராயண ராவுடன் வருகை தந்தார்.

நாச்சிக்குப்பத்தில் தலைவர்...#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth @rajinikanth #BinaryPost pic.twitter.com/ZCZareOqsC

— Binary Post (@BinaryPost001) August 31, 2023

ஏமாற்றமடைந்த ஊர் மக்கள் :

மதியம் 12 மணியளவில், நாச்சிக்குப்பத்திற்கு வந்தவர், நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெற்றோர் ரானோஜிராவ் - ராம்பாய் சிலைகளுக்கும், சுவாமி சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தோட்டத்தை சுற்றி பார்த்த ரஜினிகாந்த், அங்கிருந்த தனது உறவினர்கள், தோட்டத்தில் பணிபுரிபவர்களிடம் நலம் விசாரித்தார். 15 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த ரஜினிகாந்த், கார் மூலம் கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த் வந்துள்ளதை அறிந்து அங்கு வந்த உள்ளூர் மக்கள், அவர் சென்றுவிட்டதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர். 

தலைப்புகள்
#ரஜினி#Rajinikanth#ரஜினிகாந்த்#Rajini parents#ரஜினி பெற்றோர்கள்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement