என்னுடைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் இவர் தான் என்று ரகசியத்தை முதன்முதலாக ரஜினிகாந்த் உடைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். மேலும், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

ரஜினி நடிக்கும் படங்கள்:

அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தான் அரசியலுக்கு வராததற்கான காரணம் இவர்தான் என்று ரஜினிகாந்த் ரஜினிகாந்த் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, ரஜினிகாந்த் அவர்கள் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வர இருப்பதாக ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் அரசியல்:

இது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், இதற்கான பணிகளும் நடந்து கொண்டிருந்தது. பின் 2020 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் என்றும், அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால், திடீரென்று 2021 ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று மூன்று பக்க அறிக்கையை ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல பேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

விழாவில் ரஜினி சொன்னது:

இப்படி ஒரு நிலையில் ரஜினிகாந்த அவர்கள் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நடந்த வெள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர், நான் அரசியலுக்கு வராததற்க்கு மருத்துவர் ரவிச்சந்திரன் தான் காரணம். நான் அரசியல் ஈடுபடலாம் என்று முடிவெடுத்தபோது கொரோனா முதல் நிலை முடிந்து இரண்டாவது அலை வந்திருந்தது. நான் நோய் எதிர்ப்பு சக்திக்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் அரசியலில் இருந்து பின்வாங்க முடியாது என்று மருத்துவரிடம் கூறினேன்.

Advertisement

அரசியல் வராததற்கான காரணம்:

ஆனால், மருத்துவர் ரவிச்சந்திரன், நீங்கள் பிரச்சாரம் செய்வது, மக்களை சந்திப்பது இதெல்லாம் கூடாது. பிரச்சாரம் செய்யும் போது மக்களை மிக அருகில் சந்தித்தால் உங்களுடைய தொற்று பாதிக்கும். அதனால் பிரச்சாரம் செய்யும் போது பத்தடி தள்ளி நின்று பிரச்சாரம் செய்யலாம். ஆனால், மாஸ்கை கழட்டவே கூடாது என்று கூறினார். இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதால் தான் வேறு வழி இல்லாமல் நான் அரசியலில் ஈடுபட முடியாமல் பின்வாங்கினேன். ஆகவே, நான் அரசியல் வேண்டாம் என்று முடிவு எடுத்ததற்கு மருத்துவர் ரவிச்சந்திரனும் ஒரு காரணம் என்று கூறியிருந்தார்.

Advertisement