சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிடித்த சீரியல் இது தானாம் – எந்த சேனல்ன்னு நீங்களே பாருங்க.

0
192
rajini
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிடித்த சீரியல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
rajini

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினி நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

-விளம்பரம்-

ரஜினிக்கு பிடித்த சீரியல்:

அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ரஜினிக்கு பிடித்த சீரியல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரபல சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வத்தின் நண்பர் ஒருவர் சமீபத்தில் ஜெயிலர் பட சூட்டிங் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இருந்தார். அப்போது அவரிடம், சன் டிவியில் திருசெெல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தான் எனக்கு மிகவும் பிடித்த சீரியல்.

திருச்செல்வம் குறித்த தகவல்:

இந்த சீரியலை என்னோட குடும்பத்தினர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர் என்று ரஜினி கூறியதாக நேர்காணல் ஒன்றில் திருச்செல்வம் கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் திருச்செல்லம். இவர் இயக்கிய பல சீரியல்கள் ஹிட் கொடுத்திருக்கிறது. பெரும்பாலும், இவர் பெண் கதாபாத்திரங்களை வலுவப்படுத்தும் வகையில் தான் சீரியல்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் வகித்து வருகிறது.

Advertisement