தமிழ் கடவுள் முருக பெருமானை இழிவுபடுத்தும் விதத்தில் ‘கந்த சஷ்டி” பாடலை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடுயூப் சேனல் தான் தற்போது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப்  சேனலை விமர்சித்தும்,  அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். மேலும், கருப்பர் கூட்டம் யூடுயூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே போல இந்த சர்ச்சைக்கு பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா, நட்டி நாகராஜ், திரௌபதி இயக்குனர் மோகன், ராகவா லாரன்ஸ், வரலக்ஷ்மி சரத்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜ் கிரண் போன்ற பல்வேறு திரை பிரபலங்கள் கூட கறுப்பர் கூட்டத்தின் விடீயோவிற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், பல்வேறு தரப்பினரும் கறுப்பர் கூட்டம் தரப்பினர் மீது வழக்கும் பதிவு செய்தனர்.

Advertisement

இது ஒருபுறம் இருக்க இந்தப் புகாரில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யூடியூப் தலைமைக்கு காவல்துறை கடிதம் அளித்திருந்த நிலையில் தற்பொழுது வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மத்தது வேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும், ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா. என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement