மாலத்தீவில் ஜில் பண்ணும் ரஜினிகாந்த்- காரணம் இது தான், வைரலாகும் புகைப்படம்

0
1340
- Advertisement -

மாலத்தீவிற்கு ரஜினிகாந்த் சுற்றுலா சென்று இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

குறிப்பாக, கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை. எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் பாடல்:

அதோடு இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. பின் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த பாடலானது துள்ளல் அதிகம் உள்ள கலக்கலான பாடலாக வெளியாகியுள்ளது. இந்த பாடல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி இருக்கிறது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது.

-விளம்பரம்-

ரஜினி நடிக்கும் படங்கள்:

அது மட்டும் இல்லாமல் இந்த வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், இந்த படத்தின் மூன்றாவது பாடலான ஜூ ஜூபி என தொடங்கும் களவாணி கண்ணய்யா பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை அடுத்து ரஜினி அவர்கள் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இவருடைய காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டது.

மாலத்தீவில் ரஜினிகாந்த்:

இதனை அடுத்து ரஜினி அவர்கள் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலத்தீவில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ,படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் சிறிய பிரேக் எடுத்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு இவரை மிக சிறப்பான மரியாதை உடன் வரவேற்று இருக்கிறார்கள். பின் ரஜினி கடற்கரையில் ரிலாக்ஸாக நடந்து வரக்கூடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதை தான் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement