ஜெயிலர் Showcase வீடியோ – ‘ஜெயிலரை failure ஆக்குவோம்’ – சபதம் எடுத்துள்ள விஜய் ரசிகர்கள் ? வைரலாகும் செய்தி.

0
1988
jailer
- Advertisement -

ரஜினியின் ஜெயிலர் படத்தின் டிரைலரை பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

கடைசியாக ரஜினி நடித்த படம் அண்ணாத்த. இது அண்ணன்-தங்கை பாச கதையை மையாக கொண்ட படம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இதை அடுத்து ரஜினி தற்போது “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இசை வெளியீட்டு விழா:

இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அதனை அடுத்து இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

படத்தின் ட்ரைலர்:

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சோசியல் மீடியாவில் விஜய் குறித்து பரவிய வதந்திக்கும், குட்டி ஸ்டோரி குறித்தும் மாஸாக பேசியிருந்தார். இந்த நிலையில் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஆக்ஷனில் இறங்கும் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். மேலும், ரஜினிகாந்துக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருடைய மனைவியாக ரம்யா கிருஷ்ணன் இருக்கிறார். ஒரு பேரனும் இருக்கிறார். இப்படி அமைதியான சூழலில் வாழும் ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் ரவுடிகளை வேட்டையாடும் போலீசாக மாறுகிறார்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

தற்போது இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். வழக்கமான பழிவாங்கல் கதையாக தான் இருக்கும் என்றெல்லாம் இருக்கிறர்கள். அதிலும் ஒரு சிலர், எப்படிடா, இந்த அருந்த பழசு கதையை திருப்பி எடுத்து வச்சிருக்க. பீஸ்ட் படத்திலேயும் இதுதான் பண்ண, இப்பவும் இதேவா? மூன்று மணி நேரம் எப்படி நாங்க பார்க்கிறது என்று கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் மேலே ‘ஜெயிலரை failure ஆக்குவோம்’ என்று விஜய் ரசிகர்கள் கூறி வருவதாக பிரபல பத்திரிகையின் அட்டைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

Advertisement