ரஜினி பட நடிகை ராதிகா ஆப்தேவுக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் Vaah! Life Ho Toh Aisi! என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் 2013 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் நடித்தார். பின் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த கபாலி படத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
ராதிகா ஆப்தே திரைப்பயணம்:
இதை அடுத்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சித்திரம் பேசுதடி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் தமிழில் வெளியாகவில்லை. ஆனாலும், தற்போது இவர் பாலிவுட், ஹாலிவுட் போன்ற பிறமொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தே குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் துணிந்து நடித்து வருகிறார். இதற்கு இடையே நடிகை ராதிகா ஆப்தே அவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு பெனெடிக்ட் டெயிலர் என்பவரை காதலித்து வந்தார். இருவருமே ஒர் ஆண்டு லிவிங் டுகெதரில் வாழ்ந்து இருந்தார்கள்.

ராதிகா ஆப்தே திருமணம்:
பின் இவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னும் ராதிகா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இதனால் இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ராதிகா ஆப்தேவுக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராதிகா ஆப்தே குழந்தை:
இது தொடர்பாக ராதிகா, தன் குழந்தைக்கு பால் ஊட்டும் படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, எனக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால், இவருக்கு பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்று கூறிப்பிடவில்லை. திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தான் இவர் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






