மகள் என்றாலும் சம்பளம் தான் – தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரஜினி எத்தனை கோடி வாங்கியுள்ளார் தெரியுமா ?

0
1125
Lalsalaam
- Advertisement -

லால் சலாம் படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த எல்லாம் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து இருக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். மேலும், இந்த படம் இதுவரை 650 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் ஆகியோரை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து அவர்கள் அனைவருக்குமே காரை பரிசளித்திருக்கிறார்.

லால் சலாம் படம்:

பின் ஜெயிலர் படத்தில் இருந்து தனக்கு வந்த லாபத்தில் மூலம் விருப்பப்பட்ட தொகையை அவர்களுக்கு காசோலையாகவும் கொடுத்து இருக்கிறார். இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்கள் இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் ஒன்று, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படம். ஏற்கனவே இவர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதுதான் அவரது முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

படத்தில் ரஜினி ரோல்:

அதன் பின்னர் 8 ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை எடுத்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் தொடங்கியது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகனாக நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக பிரபல நடிகை ஜீவிதா, காமெடி நடிகர் நடித்துள்ளார்கள். இந்த படம் இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ரஜினி வாங்கிய சம்பளம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் வருகிற டிசம்பர் எட்டாம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மொய்தீன் பாய் என்ற சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் டீம் ஜாம்பவான் கபில்தேவ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மொய்தீன் பாயாக நடிப்பதற்கு 40 கோடியை சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement