ஜெயிலர் படம் சுமாரான படம் தான் வெற்றி விழாவில் பேசிய ரஜினி காந்த். தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து இருந்தார்.

அதற்கேற்ப நெல்சனின் முந்தைய படமான விஜயின் பீஸ்ட் படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், பல முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது.

Advertisement

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த பாடம் வசூலை வாரி குவித்து வருகிறது.

வெற்றி விழாவில் ரஜினி:

ஜெய்லர் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் ஜெய்லர் திரைப்படம் ஆவ்ரேஜ் திரைப்படம் தான் என்று அனைவரின் முன்னிலையில் உன்னை போட்டு உடைத்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி கலாநிதி சார் அதுதான் நன்றி சொல்ல வேண்டும் ஆடியோ லான்ச் தொடங்கி எல்லாவற்றிலும் சிறப்பாக செய்திருந்தார். திரைப்படம் ஹிட்டான உடனே அனைத்து கலைஞர்களுக்கும் அழைத்து கறி விருந்து அளித்தார். அதுமட்டுமல்லாமல் எனக்கும் டைரக்டர் இசையமைப்பாளர் என எல்லாத்திற்கும் கார் ஒன்று பரிசாக அளித்தார். இப்போது அந்த காரில் தான் வந்தேன். இப்பொழுது தான் எனக்கு பணக்காரன் போல உணர்வு வந்திருக்கின்றது சத்தியமாக சொல்கிறேன் காரில் கலந்து வரும் போது சும்மா அப்படி இருந்தது.

Advertisement

ஒரு திரைப்படம் வெற்றி அடைந்தால் அந்த திரைப்படத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்பதற்கு கலாநிதி சார் ஒரு உதாரணம். இது கோலிவுட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு கலாநிதி சார் வழிகாட்டுதலாக இருப்பார். உன் கலாநிதி சார் ஜோசியம் கூட பார்க்க ஆரம்பித்து விடலாம் ஏனென்றால் அவருடைய கணிப்பு அவ்வளவு துல்லியமாக இருந்தது. அனிருத் கலாநிதி சாரணம் கேட்கும் போது பேட்டை திரைப்படத்தின் பக்கத்தில் வருமா என்று கேட்டார் அதற்கு கலாநிதி கலாநிதி சார் 2023க்கான பாஷா திரைப்படத்திற்கு பக்கத்தில் வரும் என்று கூறி இருந்தார். இது குறித்து இசை வெளியீட்டு விழாவில் அவர் ஓப்பனாக மெகா ஹிட் என்று கூறியிருந்தார். முதலில் பின்னணி இசை இல்லாமல் திரைப்படம் போட்டு காட்டப்பட்டது. திரைப்படத்தைப் பார்த்த செம்பியன் சார் படம் ஆவரேஜ் தான் என்று கூறினார் எனக்கும் படம் அவரேஜர்க்குதான் இருந்தது.

Advertisement

ஆனால் அதற்குப் பின்பு அனிருத் இசை தான் இந்த திரைப்படத்தை தூக்கி நிறுத்தியது. அனிருத் என்னுடைய மகன் எனக்கு ஹிட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அவரது நண்பருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அப்படி வைத்து வந்தார். கேமரா மேன் முதல் எடிட்டர் வர எல்லாரும் சிறப்பாக வேலை செய்து இருந்தனர். ஸ்டன்ட் மாஸ்டர் சிவா என்று சொன்னது நான் ஆரம்பத்தில் பயந்தேன். அவர் தெலுங்கில் பாலையா வைத்த படம் பண்ணியிருந்தார் எனக்கும் அது போலான தான் சண்டைக்காட்சி சிந்தனை வைப்பார் என்று நினைத்து பயந்தேன். ஆனால் நெல்சன் கொடுத்தது போலவே மிகவும் ரியல்ஸ்டிக்காக செய்து கொடுத்தார். இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய மரியாதை பெற்று கொடுத்தது அந்த படத்தில் நடித்த விநாயகன் என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisement