ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழ காமெடியில் நடித்த நடிகர் திடீர் மரணம். காரணம் இது தானாம்.

0
2025
pawnraj
- Advertisement -

ரஜினி முருகன் பட நடிகர் காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு துயர் சமபாவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பல்வேறு பிரபலமான நடிகர்களின் மரணம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் காலமாகி இருந்தது தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து கே வி ஆனந்த், பாண்டு என்று பலர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

இப்படி கொரோனாவால் பல்வேறு பிரபலங்கள் மரணத்து வரும் நிலையில் சமீப காலமாக பல்வேறு பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக காலமாகி வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லை சிவா காலமாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் காலமாகி இருக்கிறார்.

இதையும் பாருங்க : சித்தார்த்த கூத்தாடினா, அப்போ ரஜினி, குஷ்பூலாம் யாரு – மாரிதாஸை வெளுத்த பிக் பாஸ் நடிகை.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பவுன்ராஜ். மேலும், இந்த படங்களில் இவர் பொன்ராமின் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் ரஜனி முருகன் படத்தில் இவரது காமெடி மிகவும் பிரபலமானது. அதிலும் ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழ காமெடி பெரும் பிரபலமானது.

அதிலும் அந்த காட்சியில் இவர், மதுரகாரனுக்கு கையே கத்தி விரலே வீச்சுடா’ என்ற வசனத்தை இன்னமும் மறக்க முடியாது. இப்படி ஒரு நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement