Rajini171 : ஆர்வம் காட்டும் சன் பிக்சர்ஸ் மற்றும் லைகா – ரஜினி -லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு எப்போது ?

0
445
Lokesh
- Advertisement -

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தும், வசூலிலும் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரை பயணத்தை தன்னுடைய நண்பருடன் இணைந்து 80 ஆயிரம் ரூபாய் பண செலவில் ஒரு “களம்” என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார்.

-விளம்பரம்-

அந்த குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜின் “அவியல்” குடும்ப தொகுப்பு திரைப்படத்தின் மூலம் வெளியிட்டார். இதனை தொடர்ந்து இந்த படத்தை பார்த்த பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர்.பிரபு, லோகேஷ் கனகராஜிடம் ஏதாவது கதை இருந்தால் கொண்டு வாருங்கள் எனக் கூற “மாநகரம்” படத்திற்கு வாருங்கள் எழுதி கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தை தொடர்ந்து தான் தன்னுடைய லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் திரைப்பயணம்:

அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்து இருக்கிறார். கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படம் மிக பெரிய அளவில் சாதனை படைத்து இருந்தது. இந்த படம் வசூலில் கோடிகளை அள்ளி குவித்து இருந்தது இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு இப்படத்தில் விக்ரம் பட நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

லோகேஷ்-ரஜினி கூட்டணி:

ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் லோகேஷ்- ரஜினி கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, லோகேஷ் அவர்கள் ரஜினிக்காக ஒன் லைன் கதை ஒன்றை ரெடியாக வைத்திருக்கிறாராம். அதை ரஜினியிடமும் கூறியிருக்கிறார். ரஜினி- லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படம் குறித்து இருவரிடமும் தயாரிப்பு நிறுவனம் பேசி வருகிறது.

படம் குறித்த விவரம்:

தற்போது ரஜினி அவர்கள் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பின் ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் படத்தை முடித்துவிட்டு ரஜினி அடுத்து லோகேஷ் படத்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை லைக்காவும், ராஜ்கமல் நிறுவனமும் தயாரிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம், தயாரிப்பு நிறுவனம் உறுதியான பிறகு தான் ரஜினி- லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement