பாட்ஷா பட வசனத்தை பாட்ஷா பட கெட்டப்பில் மேடையில் பேசிய ரஜினி. அறிய வீடியோ.

0
3174
basha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் தான். அந்த வகையில் அவருடைய நடிப்பில் வெளிவந்த முக்கிய படங்களில் ஒன்றாக திகழ்வது பாட்ஷா படம். 1995 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த பாட்ஷா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரன்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-
Superstar Rajinikanth Basha Movie Video

இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மாணிக்கம் என்ற பெயரில் ஆட்டோகாரன் ஆகவும், பாட்ஷா என்ற பெயரில் கேங்ஸ்டார் ஆகவும் நடித்திருப்பார். இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், ரஜினிகாந்த் அவர்களின் சினிமா பயணத்தில் இந்த பாட்ஷா படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அதுவும் இந்த படத்தில் ரஜினி காந்தும், ரகுவரனும் போன் காலில் பேசும் டயலாக் தான் வேற லெவல். இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாட்ஷா படம் கெட்டப்பில் செம்ம மாஸாக, ஸ்டைலாக மேடையில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக ஷேர் செய்யப்படும் லைக் செய்யப்பட்டும் வருகிறது.

தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு திரையரங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement