பிரபுதேவா இரண்டாம் திருமணம் உண்மை தான் – ராஜுசுந்தரம் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
702
prabudeva
- Advertisement -

நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா இரண்டாம் திருமணத்தை பற்றி அவரது சகோதரரும் நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் உறுதி செய்துள்ளார். நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பிரபலமான நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபு தேவாவின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்றும் அழைக்கிறார்கள். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடி உள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-59.jpg

அதே போல தமிழில் போக்கிரி, இந்தியில் வான்டெட் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதி த் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவா நடிகை நயன்தாராவின் காதல் மலர்ந்தது. பிரபுதேவா, நயன்தாராவுடனான பிரச்சனையால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

ஆனால், நயன்தாரா விக்னேஷ் ஷிவனிடம் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபுதேவாவின் முதல் மனைவி பேசுகையில் நயன்தாராவை எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும், அவளை சந்திக்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி ஒன்னு பலார்ன்னு கன்னத்தில் அரையலாம் என்று தோன்றுகிறது என்று கோபத்துடன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடிகர் பிரபு தேவாவிற்கு கடந்த செப்டம்பர் மாதமே திருமணம் முடிந்துவிட்டது என்று பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியானது.

கடந்த சில காலமாக பிரபுதேவா முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அந்த முதுகுவலி பிரச்சினையை சரி செய்வதற்காக பிசியோதெரபிஸ்ட் ஒருவரிடம் பிரபுதேவா சிகிச்சை பெற்று வந்தாராம். அவருக்கு சிகிச்சை பார்த்தது ஒரு பெண் மருத்துவர் தானம். முதுகு வலிக்காக அந்த பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவந்த பிரபுதேவாவிற்கு காதல் ஏற்பட்டதால் காதும் காதும் வைத்தது போல பிரபுதேவா திருமணத்தையே முடித்து விட்டார் என்று செய்திகள் வெளியானது. எப்படியோ இத்திருமணம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து ஆங்கில நாளிதழ் ஒன்று பிரபுதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரத்தை தொடர்பு கொண்டு திருமணம் குறித்து விசாரிக்க, அவரும் இந்த கல்யாணம் நடந்தது உண்மை தான். இந்த சுப காரியத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement