'ரகிட்ட ரகிட்ட' பாடலில் ஒரே ஸ்டெப்பில் பலரை கவர்ந்த நடிகை, ட்ரெண்டிங் பாடலுக்கு போட்ட ரீல்ஸ்.

By Rajkumar · 1/10/2021

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான டிக்கிலோனா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார் மற்றும் அர்வி அவர்கள் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது.

https://twitter.com/chettyrajubhai/status/1443579249634414605

காதல், காமெடி, டைம் டிராவல் என்று ஒரு Scifi காமெடி படமாக உருவாகி இருந்த இந்த படத்தின் மூலம் மாறன், அஹானா என்று இரண்டு பேர் மிகவும் பிரமபலமடைந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற இளையராஜாவின் ரீ மிக்ஸ் பாடலான 'பெயர் வச்சாலும் வைக்காம போனாலும்' பாடல் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார் அஹானா.

இதையும் பாருங்க : அந்த விஜய் படம் எனக்கு தான் வந்துச்சி,ஆனா அந்த படத்துல என்ன Guest ரோல் கூப்பிட்டாங்க கடுப்பாகிட்டேன்.

குறிப்பாக இந்த பாடலில் வரும் 'காதல் மன்னன' என்ற வரியில் அஹானா போட்ட ஸ்டெப் பலரையும் கவர்ந்தது. இந்த குறிப்பிட்ட பாடல் வரியை மட்டும் பலர் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் இந்த பாடலுக்கு அன்பே வா சீரியல் நடிகையும் குரூப் டான்ஸருமான ஹேமாவும் ரீல்ஸ் செய்து அசத்தி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=A7RM9eD-LOk

அந்த வீடியோ தற்போது பலரை கவர்ந்துள்ளது. குரூப் டான்ஸரான ஹேமா தயாள் பல பாடல்களில் குரூப் டான்ஸராக நடனமாடி இருக்கிறார். இவர் டான்ஸ் ஆடும் பாடல்களில் ,மிகவும் கவனிக்கப்பட்டுவிடுகிறார். குறிப்பாக 'ரகிட்ட ரகிட்ட ' பாடலில் சஞ்சனாவின் குயூட் ஸ்டெப் வீடியோவிற்கு அடுத்தபடியாக இவரது டான்ஸ் ஸ்டெப் வீடியோ தான் பல வாட்ஸ் அப் ஸ்டெட்டஸ்களை ஆக்கிரமித்து இருந்தது என்பது குறிப்பித்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full