அந்த விஜய் படம் எனக்கு தான் வந்துச்சி,ஆனா அந்த படத்துல என்ன Guest ரோல் கூப்பிட்டாங்க கடுப்பாகிட்டேன்.

0
66558
anand
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்பாபு நடிகர் மட்டுமில்லாமல் நன்றாக நடனம் ஆடும் திறனும் கொண்டவர். இவர் 1983 முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்து பிரபலமானவர். பின்பு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் கூட இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான மௌனராகம் தொடரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Actor Nagesh Son Anand Babu Family pic Goes Viral On Internet

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஆனந்த் பாபு அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் விஜய் குறித்தும் தன்னுடைய நடனம் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, முதலில் என்னுடைய கனவு மருத்துவர் ஆவது தான். எனக்கு ஆரம்பத்தில் ஆக்டிங் டான்ஸ் எல்லாம் ஒன்னு தெரியாது. பிறகு அதை நான் ஒரு சவாலாக எடுத்து செய்தேன். ஆரம்பத்தில் எனக்கு சினிமாவில் அந்த அளவிற்கு ஈர்ப்பு இல்லை. அப்புறம் அப்பா படத்தை பார்த்த பிறகு தான் நான் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். நான் முதல் முறையாக ஒரு மேடையில் நடனம் ஆடி இருந்தேன்.

- Advertisement -

அங்கு அப்பா தான் சிறப்பு விருந்தினர். எனக்கு அப்ப முதல் பரிசு கிடைத்தது. அதெல்லாம் செய்தித்தாளில் வந்த உடன் நிறைய இயக்குனர்கள் அப்பாவிடம் கால் பண்ணி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்து இருந்தார்கள். அதில் அப்பா உடைய நெருங்கிய நண்பர் ஒருவர் படம் பண்ண கேட்டதனால் அப்பா என்னிடம் கூட சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டார். நானும் பண்ணறேன் என்று சொல்லிவிட்டேன். அந்த படம் ஹிட்டாகி என்னுடைய தொழில் என்னுடைய வாழ்க்கை மாறி இப்போது இங்கே இருக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=2iJuMsW8YBE

சினிமாவில் நாகேஷ் சார் பையன் என்னம்மா டான்ஸ் ஆடுறாரு என்ற பெயரை நான் அப்பாவுக்கு வாங்கி கொடுத்ததில் ரொம்ப சந்தோசம். அதோடு அவர் பெயரை நான் கெடுக்கவில்லை. விஜய் தம்பி நடிப்பில் விக்கிரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படத்தில் முரளி நடித்த ரோலில் முதலில் நான் தான் நடிக்க வேண்டியது. எனக்கு அப்ப மனதில் ஒரு வருத்தம் இருந்ததால் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம்.

-விளம்பரம்-

ஆனால், கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தது எனக்கு கஷ்டமாக இருந்தது. அதோடு அப்ப நான் செல்லப்பிள்ளை, விக்ரமன் சாருக்கும் செல்லப்பிள்ளை. அப்படி இருந்தும் எனக்கு கெஸ்ட் ரோலில் நடிப்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இருந்தாலும் அந்த படம் பண்ணி இருக்கலாம். நானும் இப்ப படங்களில் காமெடி ரோலில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். வடிவேலு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் போது நானும் என்ட்ரி ஆகலாம் என்று இருக்கிறேன் என்று பகிர்ந்து கொண்டார்.

Advertisement