படுக்கைக்கு அழைத்த நடிகர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராகுல் ப்ரீத் சிங்.

0
10491
rakul-preet-singh
- Advertisement -

நடிகை ரகுல் பிரீத் சிங் குறித்து பல சர்ச்சைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் எழுந்து உள்ளது. சினிமாவில் மீட்டு பெரும் பிரச்சனையாகவே வந்து கொண்டிருக்கின்றது. பொது வாழ்க்கையில் தான் இப்படி என்று பார்த்தால் சினிமா வாழ்க்கையில் பயங்கரமாக நடந்து கொண்டிருக்கின்றது. அதிலும் சில நடிகைகள் தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்கள். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பிரச்சனை பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நடிகை ஸ்ரீ ரெட்டி அவர்கள் பல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களை தாறு மாறாக சமூக வலைத்தளங்களில் பேசி இருந்தார்.

-விளம்பரம்-
Image result for ரகுல் ப்ரீத் சிங்"

- Advertisement -

மேலும், இது குறித்து எந்த ஒரு பிரபலங்களும் இவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும், இதன் மூலம் பல பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு சில ஆண்களின் வக்ரம் எண்ணம் கொண்டவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் பேசத் தொடங்கினார்கள் என்றும் சொல்லலாம். இந்நிலையில் இது போன்றே பல பிரச்சனைகள் நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கும் இருப்பதாக ஸ்ரீ ரெட்டி அவர்கள் கூறி இருந்தார். ஆனால், அதற்கு ரகுல் பிரீத் சிங் அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது இது போன்ற பிரச்சினைகளை நானும் சந்தித்து உள்ளேன் என்று வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.

இதையும் பாருங்க : காதல் கோட்டை படத்துக்கு இப்படி ஒரு கிளைமாக்ஸ் தான் இருந்துச்சாம். இது நீங்க ஒத்துப்பீங்களா பாருங்க.

நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஆகும். இவர் தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஸ்பைடர்,தீரன்,தேவ், என்ஜிகே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் கூறி இருப்பது, தன்னை ஒரு நடிகர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக வெளிப்படையாக குறிப்பிட்டு உள்ளார். ஆனால், நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் அந்த ஹீரோ யார் என்பதை கடைசி வரை கூற வில்லை. ஏன் என்றால் அவர் இந்த விஷயத்தை டீசன்டாக தான் தன்னிடம் கேட்டதாகவும் அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Image result for ரகுல் ப்ரீத் சிங்"

இது போன்ற பிரச்சனைகள் சினிமா உலகில் பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. சினிமா துறையினரே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வில்லை என்றால் என்ன சொல்வது. மேலும், சமூக ஆர்வலர்கள் சினிமா துறையினரிடம் இது குறித்து கூறியது, ‘நீங்கள் தான் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். நீங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது பார்த்தாவது மற்றவர்கள் திருந்துவார்கள். சினிமா துறையில் ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இனிமேல் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வளர்ச்சிக்கு ஒரு போதும் இது போன்ற பிரச்சனைகள் தடையாக இருக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள்.

Advertisement