ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பிரபல நடிகருடன் காதல். அந்த நடிகருக்கு எங்கயோ மச்சம் இருக்குப்பா.

0
74459
rakul-preet-singh
- Advertisement -

கோலிவுட் மற்றும் பாலிவுட் என சினிமா துறை உலகில் கலக்கி கொண்டிருப்பவர் நடிகை ரகுல் பிரித் சிங். தற்போது ரகுல் பிரித் சிங் அவர்கள் நடிகர் ராணாவுடன் அடிக்கடி வெளியே செல்வதாகவும், டேட்டிங் செய்வதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றன. பாகுபலி வில்லன் நடிகர் ராணா அவர்கள் சில காலங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகையான திரிஷாவுடன் டேட்டிங் செய்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால், திடீரென்று இவர்களுடைய காதல் டைட்டானிக் கப்பல் போல் மூழ்கியது. மேலும், இதுகுறித்து நடிகை த்ரிஷாவிடம் கேட்டபோது திரிஷா அவர்கள் கூறியது, நான் ராணாவை காதலிக்கவில்லை. மேலும்,நான் ராணாவுடன் நட்பு முறையில் தான் பழகி வந்தேன் என விளக்கம் அளித்தார். மேலும், திரிஷா கூறியதை நடிகர் ராணாவால் ஏற்றுக்கொள்ள முடிந்ததோ? இல்லையோ?ஆனால், ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

-விளம்பரம்-
Image result for rakul preet singh rana dagupathy"

அதன் பிறகு நடிகை தமன்னாவுக்கு ராணாவுக்கும் கிசு கிசு உள்ளதுஎன இணையங்களில் பரவியது. இந்நிலையில் தமன்னாவும் ராணாவை நான் காதலிக்கவில்லை என்று நைசாக நழுவி விட்டார். தற்போது நடிகை ரகுல் பிரீத் சிங் நடிகர் ராணாவை காதலிப்பதாக சில காலமாகவே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ரகுல் பிரீத் சிங்கிடம் கேட்டபோது அவரும் நான் ராணாவை காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறுகின்றார். இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் மனது சுக்குநூறாக நொறுங்கியது என்று கூட சொல்லலாம். இதுகுறித்து நடிகை ராகுல் பிரீத் சிங் அவர்கள் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, நானும் ராணாவும் நல்ல நண்பர்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் ராணா என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் அதாவது என்னுடைய விடும் அவருடைய வீடும் அருகில் தான் உள்ளது.

இதையும் பாருங்க : இணையத்தில் வைரலாகும் அஜித்தின் மகன் மற்றும் மகள் புகைப்படம். ஆனால், அனோஷ்காவின் பற்களில் ?

- Advertisement -

நான் திரையுலகிற்கு நுழைந்த முதல் நாள் அன்றே ராணாவை எனக்கு நல்லா தெரியும். அப்போது இருந்தே நாங்கள் நெருங்கிய நண்பர்கள். தற்போதைய சூழலில் நான் வேலையில் தான் பிசியாக உள்ளேன் தவிர எனக்கு காதலிக்க நேரமில்லை. அதுமட்டும் இல்லாமல் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. குறிப்பாக நான் சிங்குலாக தான் இருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும்,நடிகை ரகுல் பிரீத் சிங் ‘தடையர தாக்க’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு ஸ்பைடர்,தீரன், என்ஜிகே, என்னமோ ஏதோ,தேவ் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் ‘sk 14’ என்ற படத்திலும், உலக நாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 2 படத்திலும்’ நடித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Rakul Preet Singh with Rana Dagubati

இதனைத் தொடர்ந்து நடிகை ரகுல் பிரீத் சிங் நடிப்பில் நவம்பர் 22 ஆம் தேதி ‘மர்ஜவான்’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக் உள்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அடுத்ததாக அர்ஜுன் கபூருக்கு ஜோடியாக மற்றொரு பாலிவுட் திரைப்படத்திலும் ரகுல் பிரீத் நடித்து வருகிறார். இப்படி பாலிவுட், கோலிவுட் என அனைத்து படங்களிலும் பிசியாக இருக்கிறார் ரகுல் பிரீத் சிங். இந்த மாதிரி கிசுகிசுப்பில் எந்த ஒரு உடன்பாடும் இல்லை என்று தெளிவாக கூறியிருந்தார். ஆனால்,ராணா நிலமையை நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.நடிகர் ராணா ஏற்கனவே திரிஷாவை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement