உலகின் 5வது விலையுயர்ந்த வைர மோதிரத்தை தமன்னாவிற்கு பரிசளித்த பிரபலம்.! விலை எவ்வளவு தெரியுமா ?

0
71914
tammana
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் சூப்பர் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சினிமா துறைக்கு 2005ம் ஆண்டு ‘சே ரோசன் செகரா’ என்ற இந்தி படத்தின் மூலம்தான் அறிமுகமானார். தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமானார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தமன்னா அவர்கள் தற்போது திரைஉலகிற்கு வெளிவந்து கலக்கி கொண்டிருக்கும் சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது சிரஞ்சீவியின் காதலியாகவும், சுதந்திரப் போராட்டத்திற்காக போராடும் இந்திய வீராங்கனையாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, தமன்னா, நயன்தாரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.அது மட்டும் இல்லைங்க இந்த படத்தில் நயன்தாராவை விட கதாபாத்திரத்தில் தமன்னாதான் மாஸ் காட்டுகிறார் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள்.பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவிற்கு இந்த அளவு ஹிட்டு கொடுத்துள்ளது இந்த படம். தமன்னா வரலாற்றுக் கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்று ஒருபக்கம் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும், வரலாற்றுக் கதைகளில் அழகாகவும்,கனகச்சிதமாகவும் நடிக்கிறார் என்றும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பும், அழகும் உள்ளது.இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராம் சரண்.

- Advertisement -

மேலும்,ராம் சரண் மனைவி உபஸனா அவர்கள் ஒரு பெரிய வைர மோதிரத்தை தமன்னாவிற்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்த வைர மோதிரம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய மோதிரங்களில் இதுவும் ஒன்று ஆகும்.அது மட்டும் இல்லைங்க உலகத்திலேயே ஐந்தாவது பெரிய வைர மோதிரமும் என்று கூறுகிறார்கள். இந்த வைர மோதிரத்தின் விலை இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியானது. அதற்கு சான்றாக சில புகைப் படங்களை இணையங்களில் வெளியிட்டு வருகின்றனர் ரசிகர்கள். தற்போது உள்ள வைரங்களின் விலை நிலவரத்தின் படி 0.25 கேரட் கேரட் வைரத்தின் விலை 16,250 ரூபாய். ஒரு கிராம் வைரத்தின் விலை என்று பார்த்தால் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.அப்ப தமன்னா கையில் இருக்கும் வைர மோதிரத்தின் விலை எவ்வளவு கிராம் இருக்கும் என ரசிகர்கள் என கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இது ஏறத்தாள 312.24 கேரட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மோதிரத்தின் விலை சுமார் 2 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

width: 640px; height: 320px;

இந்த வைர மோதிரத்தை கையில் போட்டாலே பாதி கையை மறைத்துக் கொள்ளும் அளவிற்கு அழகானதாக உள்ளது என்றும் கூறுகின்றனர். மேலும், இந்த வைரம் ஜொலிஜொலிப்பாகவும், அதனுடைய வடிவம் கண்களை கவர வைக்கும் வகையில் உள்ளது என கூறுகிறார்கள்.இன்னும் சொல்லப்போனா தமன்னாவுடன் தந்தை ஒரு வைரவியாபாரி ஆவார். இவர்கள் சிந்தி வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் இவருடைய பூர்விகம் ஒரு மகாராஷ்டிர மாநிலம் என்றும் தெரியவருகிறது. அப்ப தமன்னா பாக்காத வைரமா!இது என்றும் கூறுகின்றனர் ரசிகர்கள். மேலும், இந்தப் படத்தை தொடர்ந்து தமன்னா அவர்கள் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக உள்ளார் என்றும் தெரியவந்தது

-விளம்பரம்-
Advertisement