பல ஆண்டு கழித்து மீண்டும் ஹீரோவாக வந்த ராமராஜன் – 5 மொழிகளில் உருவாகும். பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட VJS

0
1033
ramarajan
- Advertisement -

மீண்டும் தமிழ் சினிமா உலகில் ராமராஜன் ரீ- என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் இருந்து படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.

-விளம்பரம்-

இவர் 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

- Advertisement -

ராமராஜன் திரைப்பயணம்:

இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இதனிடையே ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பின் 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி. தற்போது நளினி சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

ராமராஜன் கடைசியாக நடித்த படம்:

இதுவரை இவர் இதுவரை ஹீரோவாக மட்டுமே படங்களில் நடித்திருந்தார். சினிமா பட வாய்ப்பு குறைவு என்பதால் இவர் குணச்சித்திர வேரங்களில் நடிக்க மறுத்துவிட்டார். 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு ராமராஜன் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் பயணித்தார். ராமராஜன் தன்னுடைய அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் 2012 ஆம் ஆண்டு மேடை என்ற படத்தில் ராமராஜன் நடித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் ராமராஜன் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ராமராஜன் நடிக்கும் படம்:

அதாவது, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர் சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஐந்து மொழிகளில் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதனை விஜய் சேதுபதி வெளியிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் ராமராஜன் வருகையை எதிர்பார்த்து போஸ்டரை சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement