ராம்சரண்- உபசனா மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ‘ராம் சரண்’. இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள்.

இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே தான் இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு தான் ராம் சரண் தந்தையாகும் செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி இறுதியில் தான் ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். பின் இவர்கள் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.

Advertisement

ராம்சரண்-உபாசனா குழந்தை:

இதை உபசனாவின் தாய் வீட்டிலேயே நடத்தி இருந்தார்கள். இந்த விழாவில் ராம்சரண்-உபாசனாவின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்கள் தங்களுடைய மகளுக்கு க்ளின் காரா கொனிடேலா (Klin Kaara Konidela) என்ற பெயர் வைத்தார்கள். இந்த பெயர் இந்து மதத்தில் உள்ள புனித மந்திரமான லலிதா சஹஸ்ரநாமம் ஆகும். இதில் ‘க்ளின் காரா’ என்பதற்கு `ஆன்மிக விழிப்புணர்வைக் கொண்டுவரும் மாற்றம் மற்றும் தூய்மைப்படுத்தும் ஆற்றல்’ என்று அர்த்தம்.

ராம்சரண்-உபாசனா குழந்தை பிறந்தநாள்:

இந்த நிலையில் ராம்சரண்- உபசனா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி தான் ராம்சரண்- உபசனா இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தார். சில தினங்களுக்கு முன்புதான் மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். மாலை நேரத்தில் இந்த பார்ட்டி சிறப்பாக நடைபெற்று இருந்தது. இவர்கள் இருவரின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

Advertisement

பிறந்தநாள் குறித்த தகவல்:

மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயற்கை சூழலில் அலங்காரங்கள் செய்யப்பட்டது. விருந்து கொடுக்கும் அறையில் செய்யப்பட்ட அலங்காரம் மட்டும் தங்கள் மகளுடைய நர்சரி கேற்ப செய்திருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் ராம் சரணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement

ராம் சரண் திரைப்பயணம்:

ராம் சரண் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இவர் நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். கடந்த ஆண்டு நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘game Changer’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் உருவாக்கி வருகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் ஹாலிவுட்டிலும் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement